நான் இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கு.. நினைச்ச மாதிரி எதுவுமே நடக்கல.. ஹர்திக் பாண்டியா பேட்டி

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 தொடரில் மும்பை அணி மோசமான தோல்வி சந்ததி இருக்கிறது இந்த தோல்விக்கான காரணம் குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் ஓவரை போல்ட் வீச அந்த ஓவரில் ரோஹித் சர்மா, பிரவிஸ் மற்றும் நமன் திர் ஆகியோர் தாங்கள் சதித்த முதல் பந்திலேயே போல்டிடம் விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினார்கள். இதுவே மும்பை அணியின் தோல்விக்கு முதல் படியாக அமைந்தது.

- Advertisement -

இதற்குப் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தர். இருவரும் அணியை கரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த ஜோடியால் நீண்ட நேரம் நிலைத்து நிற்க முடியவில்லை. ஹர்திக் பாண்டியா 34 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதற்குப் பின்னர் திலக் வர்மாவும் வெளியேற, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவு 125 ரன்கள் குவித்தது.

- Advertisement -

வான்கடே மைதானத்தைப் பொறுத்தவரை இந்த இலக்கு என்பது மிகவும் குறைவாகவே பார்க்கப்பட்டது. இருப்பினும் மும்பை அணியின் பலமான பந்துவீச்சினால் நெருக்கடி கொடுக்கும் என்று ரசிகர்கள் எண்ணினர். இருப்பினும் நினைத்தது போலவே ராஜஸ்தான் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை சற்று விரைவாக மும்பை இந்தியன்ஸ் அணியினர் வீழ்த்தினர். அதற்குப் பின்னர் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரியான் பராக் மற்றும் அஸ்வின் ஜோடி இந்த போட்டியில் முக்கியமாக பார்ட்னர்ஷிப் அமைத்தது.

அஸ்வின் 16 ரன்களில் ஆட்டம் இழக்க, ரியான் பராக் கடைசி வரை களத்தில் நின்று ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார். 39 பந்துகளை எதிர்கொண்டு அவர் 5 பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் என 54 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். எனவே தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் கார்த்திக் பாண்டியா கூறும் பொழுது

- Advertisement -

“ஆம். இன்று இரவு எங்களுக்கு ஒரு கடினமான நாள். நாங்கள் நினைத்த வழியில் போட்டியை எங்களால் தொடங்க முடியவில்லை. விரைவில் மூன்று விக்கெட்களை வீழ்ந்தாலும் 150 முதல் 160 ரன்கள் வரை குவிக்கும் நிலையிலேயே இருந்தோம். ஆனால் நான் ஆட்டம் இழந்த உடன் ராஜஸ்தான் ராயல் அணி மீண்டும் போட்டிக்குள் வர அனுமதித்தது.இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நான் நினைத்தது போல சில நேரங்களில் சரியான முடிவு கிடைக்கும்.

இதையும் படிங்க:முதல் பந்தில் டக் அவுட் ஆன மூன்று வீரர்கள்.. போல்ட் வேகத்தில் சரிந்த மும்பை.. தொடரும் மும்பையின் சோகம்

சில நேரங்களில் அவ்வாறு கிடைக்காது. ஒரு குழுவாக எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நான் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் இன்னும் ஒழுக்கமாக அதிக தைரியத்தை வெளி காட்ட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles