நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணியிடம் பஞ்சாப் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது அவர்களுக்கு தொடர்ந்து நான்காவது தோல்வியாக அமைந்தது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தத்துடன் பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் தோல்வி அடையாமல் வந்த பஞ்சாப் அணி அதற்கு அடுத்து தொடர்ந்து நான்கு போட்டிகளை தோற்று உள்ளது. நேற்று டெல்லி அணிக்கு எதிராக 210 ரன்கள் எடுத்தும் அந்த அணி தோல்வி அடைந்தது.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது ” குறிப்பாக இந்த ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் ஆவதில் நிறைய மாறுபாடுகள் இருந்தது. இதன் காரணமாக நாங்கள் ஒரு 30 ரன் கூடுதலாக எடுத்து இருக்கிறோம் என்றுதான் நான் மகிழ்ச்சி உடன் இருந்தேன். பந்து நல்ல முறையில் சீம் ஆன காரணத்தினால் சாகலுக்கு ஓவர் கொடுக்கவில்லை”
“பந்தை ஹார்ட் லென்த்தில் தொடர்ந்து வீசும்பொழுது நமக்கு விக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே நான் இந்த திட்டத்தை பின்பற்றினேன். ஆனால் பவுலர்கள் அதை சரியாக செய்யவில்லை. எங்கள் தோல்விக்கு காரணம் திட்டத்தை சரியாக செயல்படுத்தாததுதான்” என்று கூறியிருக்கிறார்.

