கவுண்டி போட்டியில் புஜராவுக்கு தடை.. இங்கிலாந்து நிர்வாகம் எடுத்த முடிவு.. காரணம் இதோ.!

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் சத்தீஷ்வர் புஜாரா. இவர் கடந்த சில மாதங்களாகவே அவுட் ஆப் ஃபார்மில் இருந்ததால் இந்திய அணியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்று  கவுண்டீ கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் புஜாராவிற்கு  ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

- Advertisement -

ஒரு சீசனில் நான்கு நிலையான பெனால்டிகளை பெற்றதன் விளைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில்  சாசஸ் அணிக்கு 12 புள்ளிகள் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் தொழில்முறை நடத்தை விதிகளின்படி பெனால்டி விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மூன்றாவது இடத்தில் இருந்த சாசஸ் அணி தற்போது இரண்டு இடங்கள் பின் தங்கி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

செப்டம்பர் 13ஆம் தேதி அன்று லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான போட்டியின் போது இரண்டு கூடுதல் பெனாட்டிகளை பெற்றது சாசஸ் கிரிக்கெட் கிளப். இந்த சீசனில் இதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகளின் மூலமும் இரண்டு பெனால்டிகளை பெற்றிருந்தது. இதன் காரணமாக ஒரே சீசனில் நான்கு பெனால்டிகளை அந்த அணி பெற்றதால் அதன் 12 புள்ளிகள் பறிக்கப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்திருக்கிறது

தொழில்முறை வீரர்களுக்கான நடத்தை விதிகள் 4.30-ன் படி பெனால்டி விதிக்கப்பட்ட அனைத்து போட்டிகளிலும் ஒரே நபர் கேப்டனாக இருந்தால் அந்தக் குற்றத்தில் கேப்டனுக்கும் பங்கு உண்டு. மேலும் அவர் ஒரு போட்டியில் இருந்து தானாகவே இடைநீக்கம் செய்யப்படுவார். இந்த விதியின் அடிப்படையில் சாசஸ் கிரிக்கெட்  கிளப்பின் கேப்டன் புஜாரா  ஒரு போட்டியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்த சம்பவம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப் போவதில்லை என புஜாரா மற்றும் சாசஸ் கிரிக்கெட்  கிளப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்தப் போட்டியில் சாசஸ் கிரிக்கெட் கிளப் பெனால்டி பெற காரணமாக இருந்த வீரர்கள் ஹெய்ன்ஸ், ஜாக் கார்சன் மற்றும் அரி கார்வேலாஸ் ஆகியோர்   இன்று நடைபெறும் டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில்  தேர்வு செய்யப்பட மாட்டார்கள் எனவும் அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

லிசெஸ்டர் அணிக்கு எதிரான பெற்ற வெற்றியின் மூலம் 129 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் இருந்த சாசஸ் அணி தற்போது 14 புள்ளிகளை பெனால்ட்டியில் இழந்து இருப்பதால் ஐந்தாவது இடத்தில் பின்தங்கி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles