நாளை இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டியில் எப்படிப்பட்ட இந்திய பிளேயிங் லெவன் களம் இறங்கலாம் என்பது குறித்து ஒரு அலசல்!
தற்போது இந்திய ஏ அணி மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக அமெரிக்க அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இந்த இரண்டு பயிற்சி போட்டிகளிலும் அமெரிக்க அணியை 200 ரன்கள் தாண்டி எடுத்து இருக்கிறது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தது.
அமெரிக்க அணி எதிர் பார்த்ததைவிட பலமாக இருக்கின்ற காரணத்தினால் பும்ராவு மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் திட்டம் கம்பீருக்கு இருக்காது. அவர் முழு வலிமையான அணியையே களத்தில் இறக்குவார்.
இந்திய பிளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா.

