நாங்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர வேறு வழி இல்லை.. ஆனா எல்லா பெருமையும் இந்த இந்திய வீரருக்குத்தான் .. ஆட்டநாயகன் விருது பெற்ற பேர்ஸ்டோ பேட்டி

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான 262 ரன்கள் இலக்கை 8 பந்துகள் மீதம் வைத்து உலக டி20 கிரிக்கெட் லீக்கில் சேசிங்கில் உலக சாதனை படைத்திருக்கிறது பஞ்சாப் அணி. வெற்றிக்குப் பின்னர் சதம் அடித்த ஆட்டநாயகன் பேர்ஸ்டோ சசாங்க் சிங்கை பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது. இதற்கு முக்கிய காரணம் பில் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்கள், சுனில் 32 பந்துகளில் 71 ரன்கள் குவித்தனர். அதற்குப் பின்னால் வந்த வீரர்கள் ஆன வெங்கடேஷ் ஐயர் 23 பந்துகளில் 39 ரன்கள், கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் பத்து பந்துகளில் 28 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

இந்த மெகா இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை கையில் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரபு சிம்ரன் 20 பந்துகளில் அபாரமாக விளையாடி 54 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று கொல்கத்தா அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

48 பந்துகளை எதிர் கொண்ட இவர் எட்டு பவுண்டரிகள், 9 சிக்சர்கள் என 108 ரன்கள் குவித்து சிறப்பான சதத்தை நிறைவு செய்தார். இறுதிக்கட்டத்தில் இறங்கி 28 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் ஷஷாங்க் சிங் அதிரடியாக விளையாடி சிக்ஸராக விளாசியது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்குப் பின்னர் பஞ்சாப் அணியின் ஆட்டநாயகன் பேர்ஸ்டோ பேசியதாவது
“எங்களுக்கு மிக அருமையான தொடக்கம் கிடைத்தது. கொல்கத்தா அணியில் ஆரம்பத்தில் சுனில் நரேன் விளையாடியது போல, நாங்களும் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடினோம். 200 ரன்கள் துரத்தும் போது ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும். ரிஸ்க் எடுப்பதை தவிர வேறு வழியில்லை.

- Advertisement -

பெரிய ரன்களை சேஸ் செய்யும் போது அதிரடியாக விளையாட வேண்டியது மிகவும் அவசியம். இலக்கை அடைவதற்கு அதிரடியாக விளையாடி சில விக்கெட்டுகளை இழக்க விரும்பினோம். சஷாங்க் சிங் இந்த சீசன் முழுவதுமே சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவர் உள்ளே வந்து விளையாடிய சாட்கள் நம்ப முடியாத ஒன்று. அவர் இளைஞர் கிடையாது, ஆனால் மிகவும் அமைதியான நல்ல கிளீன் ஹிட்டர். அவர் கிளீன் ஹிட்கள் ஆடிய விதத்தில் முழு பெருமையும் அவரையே சேரும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:அடேங்கப்பா.. சேசிங்கில் உலக சாதனை படைத்த பஞ்சாப் அணி.. 262 ரன் இலக்கை 8 பந்துகள் மீதும் வைத்து வெற்றி.. கேகேஆர் அணி பரிதாபம்

ஒன்பது போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணிக்கு ஆறு தோல்விகளுக்குப் பிறகு மூன்றாவது வெற்றியாக இது அமைந்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles