பாகிஸ்தான் அணி இந்தியா கூட விளையாடாதுன்னு சொல்ல வாய்ப்பே இல்லை.. இல்லனா இந்த பெரிய இழப்பீடை அவங்க சந்திக்கணும் பீடாக் எச்சரிக்கை

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் வருகிற 15ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அதனால் என்ன இழப்பீடு ஏற்படும் என்று கிரிக்கெட் ஆலோசகர் பீடாக் பிரசன்னா சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

வங்கதேச கிரிக்கெட் அணி ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகிய நிலையில் அந்த அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாது என்று அறிவித்து விட்டது. இது பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அப்படி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடாவிட்டால் என்ன விளைவு உண்டாகும் என்று பீடாக் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை பாகிஸ்தான் அணி அவ்வாறு செய்தால் அவர்களின் வருமானம் நிறுத்தி வைக்கப்படும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடரை டெலிகாஸ்ட் செய்யும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும். மேலும் இவர்களால் இரண்டு வருடத்திற்கு எந்த விதமான சர்வதேசப் போட்டியிலும் பங்கு பெற முடியாது. மேலும் psl போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி கிடைக்காது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles