இன்னும் போர் முடியவில்லை.. இந்த தோல்விக்கு காரணம் சொல்ல மாட்டேன்.. கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் வெறும் 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 10 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றியை பெற்றுள்ளது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

இதன் மூலமாக 9 ஆண்டுகளுக்கு பின் ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி குவாலிஃபையர் 2வது போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் போது, நிச்சயம் மறக்க கூடிய நாளாக இது அமையவில்லை.

- Advertisement -

மீண்டும் எங்கு தவறு செய்தோம் என்பதை ஆராய வேண்டும். முதல் இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதுகுறித்து ஆய்வு செய்வதற்கும், ஆலோசிப்பதற்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளது. எனது முடிவுகள் குறித்து எனக்கு எந்த சந்தேகமும், வருத்தமோ கிடையாது. களத்திற்கு வெளியில் என்ன செய்ய வேண்டுமோ, அதனை சிறப்பாக திட்டமிட்டோம்.

- Advertisement -

போரில் தோற்கவில்லை

ஆனால் களத்தில் அதனை சரியாக செயல்படுத்த முடியவில்லை. இந்த தோல்விக்கு பவுலர்களை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் சராசரிக்கும் குறைவான ஸ்கோரை எடுத்துள்ளோம். எங்களின் பேட்டிங்கில் முன்னேற வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக சண்டிகர் விக்கெட்டில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அறிய வேண்டும்.

இந்த பிட்சில் இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் கொஞ்சம் பவுன்ஸ் வித்தியாசமாக உள்ளது. ஆனால் தோல்விக்கு பின் இதுபோன்ற காரணங்களை சொல்லக் கூடாது. ஏனென்றால் இப்படியான விக்கெட்டில் சிறப்பாக விளையாடுவதற்காக தான் தயாராகிறோம். அதேபோல் சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் பேட்டிங் செய்திருக்க வேண்டும். இந்த நாளில் தான் தோற்றுள்ளோம். ஒட்டுமொத்த போரில் தோற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles