என்ன டீம் இது.. நான் பார்த்ததிலேயே மோசமான ஒரு டீம்னா அது இதுதான்.. கேரி கிரிஸ்டன் விளாசல்

இந்த டி20 கிரிக்கெட் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான கேரி கிரிஸ்டனே இப்படி ஒரு டீமை நான் பார்த்ததில்லை என்று மோசமான வகையில் விமர்சனம் செய்துள்ளார். கேரி கிரிஸ்டன் 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல உதவியவர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க உலக கோப்பைக்கு முன்பாக பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

- Advertisement -

பல எதிர்பார்ப்புகளோடு இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தற்போது அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் அணிகள் கூட அடுத்த சுற்றை எட்டி இருக்கும் நிலையில், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

இதில் குறிப்பிடத்தக்கதாக இந்த டி20 உலக கோப்பையில் முதல் முறையாக பங்குபெறும் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல், இந்திய அணியோடு விளையாடிய குறைந்த ரன்கள் இலக்கை கூட பாகிஸ்தான் அணியால் எட்ட முடியவில்லை. அதிலும் பரம எதிரியான இந்திய அணியோடு ஏற்பட்ட தோல்வியிலிருந்து பாகிஸ்தான் அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பாகிஸ்தான் அணியில் விளையாடிய முன்னாள் வீரர்களே அந்த அணியை கடுமையாக சாடி வருகின்றனர். கேப்டன் பாபர் ஆசாமின் கேப்டன் ஷிப் செயல்பாடுகள் சரி இல்லை என்றும், வீரர்களிடையே ஒற்றுமை இல்லை என்றும் பலவேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.மேலும் பாகிஸ்தான் சென்றால் பல்வேறு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதற்காக அந்த அணியின் ஐந்து வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்லாமல் இன்னும் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக டி20 உலக கோப்பைக்கு முன்பாக பொறுப்பேற்ற கேரி கிரிஸ்டன் அணியை கடுமையாக சாடி பேசி இருக்கிறார். குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “பாகிஸ்தான் ஒரு அணியே கிடையாது. இதற்கு முன்னர் இப்படி ஒரு அணியை நான் பார்த்ததில்லை. முக்கியமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வீரர்களிடையே ஒற்றுமை இல்லை.

இதையும் படிங்க:இந்தியா இறுதிப் போட்டிக்கு போகணும்னா ஆல் ரவுண்டர்ஸ தூக்கிட்டு இவரை உள்ள கொண்டு வாங்க.. சிஎஸ்கே பயிற்சியாளர் பேட்டி

அணியில் ஒருவருக்கொருவர் ஆதரிப்பது இல்லை. அனைவரும் பிரிந்தே இருக்கின்றனர். நானும் எத்தனையோ அணிகளுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு அணியை நான் பார்த்ததே இல்லை” என்று கூறியிருக்கிறார். தனது அணியை பற்றி ஒரு பயிற்சியாளரே இவ்வாறு கூறி இருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles