PAK vs HKG.. 5 விக்கெட் 54 ரன்.. குட்டி அணியிடம் மாட்டிய பாகிஸ்தான்.. ஏசியன் கேம்ஸில் அதிர்ஷ்டவசமாக தப்பியது.!

சீனாவின் ஹுவாங்சோ நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தடகள விளையாட்டுக்களும் குழு விளையாட்டுக்களும் இடம் பெற்று இருக்கின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் 2010 ஆம் ஆண்டு முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்து நடைபெற்ற 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் இடம் பெறவில்லை.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் இடம் பெற்றிருக்கிறது. இதன் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் இந்திய அணி நேபாளம் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி வைத்தியம் அளித்தது ஹாங்காங்.

- Advertisement -

ஆட்டத்தின் முதல் ஓவரின் நான்காவது பந்தில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான மிர்சா பேக் விக்கெட்டை வீழ்த்தினார் ஹாங்காங் அணியின் பந்துவீச்சாளர் ஆயுஸ் சுக்லா. இதனைத் தொடர்ந்து ரஹைல் நாசிர் 13 ரன்களிலும் ஹைதர் அலி 4 ரன்களிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் காசிம் அக்ரம் 12 ரன்களிலும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய உமர் யூசுப் 21 ரன்களிலும் ஆட்டம் இழக்க 9.1 ஓவர்களில் 54 ரன்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான்.

இதனால் ஹாங்காங் அணியுடன் அதிர்ச்சி தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அந்த அணியின் பின் வரிசை ஆட்டக்காரர்களான ஆசிப் அலி 25 ரன்களும் அரஃபாத் மின்ஹாஸ் 21 ரன்களும் அமீர் ஜமால் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 41 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது. இறுதியில் அதிரடியாக விளையாடிய ஜமால் 4 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாங்காங் அணியின் பந்துவீச்சில் ஆயுஸ் சுக்லா 47 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை சந்திக்க முடியாமல் 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஹாங்காங் அணியின் பேட்டிங்கில் 6 வீரர்கள் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஹயாத் 29 ரன்களும் எஹ்சான் கான் 16 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் குஷ்தில் ஷா 3 விக்கெட்டுகளையும் அரஃபாத் சுபியான் மற்றும் காசிம் அக்ரம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles