PAK vs BAN.. 4 போட்டிகளுக்குப் பிறகு வெற்றி.. 32.2 ஓவர்களில் பங்களாதேஷ் விரட்டிய பாக்.. அரை இறுதி வாய்ப்புகள் எப்படி.?

நடப்பு உலக கோப்பை தொடரின் 31 வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

- Advertisement -

சதாப் கான் நவாஸ் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பக்கர் ஜமான் அகா சல்மான் மற்றும் ஒசாமா மிர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் துவக்க வீரரான தன்ஷித் ஹசன் விக்கெட்டை ரன் எதுவும் எடுக்காமலும் சான்தோ விக்கெட்டை நாள் ரன்னிலும் வீழ்த்தினார் ஷாஹீன் அப்ரிதி. இதனைத் தொடர்ந்து அனுபவ வீரரான முஷ்ஃபிக்ர் ரஹீம் விக்கெட்டை வீழ்த்தினார் ஹாரிஸ் ரவூப்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய மஹ்முதுல்லாஹ் மற்றொரு துவக்க வீரரான லிட்டர்ன் தாசுடன் இணைந்து பங்களாதேஷ் அணியை ஆரம்பக் கட்ட சரிவிலிருந்து மீட்க முயற்சி செய்தார். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில் 64 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்திருந்த லிட்டன் தாஸ் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை தொடர்ந்து மஹ்முதுல்லாஹ் உடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஷகீப் அல் ஹசன். இந்த ஜோடி 28 ரன்கள் சேர்த்த நிலையில் சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்த மஹ்முதுல்லாஹ் 70 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உடன் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

- Advertisement -

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய தவ்ஹீத் ஹிர்தாய் 7 ரன்களில் அவுட் ஆக 140 ரண்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது பங்களாதேஷ். அப்போது கேப்டன் ஷகிபுடன் ஜோடி சேர்ந்தார் மெஹதி ஹசன் மிராஜ். இவர்கள் இருவரும் இணைந்து பங்களாதேஷ் அணியை வலுவான இலக்கிற்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக கேப்டன் ஷகீப் அல் ஹசன் 63 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து மெஹதி ஹசன் மிராஜ் 25 ரன்னிலும் டஸ்கின் அகமது 6 ரன்னிலும் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் பங்களாதேஷ் அணி 45.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிதி 3 விக்கெட்டுகளும் முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் பக்கர் ஜமான் மற்றும் அப்துல்லா ஷஃபீக் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதலாவது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில் சிறப்பாக ஆடிய அப்துல்லா ஷபிக் 69 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் பக்கர் ஜமானுடன் இணைந்தார். எனினும் அவர் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பக்கர் ஜமான் 74 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமது இருவரும் இணைந்து பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு வழி நடத்தினர். நெட் ரன் ரேட் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனைத் தொடர்ந்து அந்த அணி 32.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து வெற்றி பெற்றது. இறுதியாக ரிஸ்வான் 21 பந்துகளில் 26 ரன்களுடனும் இப்திகார் அகமது 15 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த தோல்வியின் மூலம் பங்களாதேஷ் உலகக் கோப்பை போட்டியிலிருந்து அரை இறுதி வாய்ப்பு இழந்திருக்கிறது. மேலும் அந்த அணியின் ஐசிசி சாம்பியன் ஸ்ட்ராபியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

மறுபுறம் பாகிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் தொடர் தோல்விக்கு பின்னர் வெற்றியின் பக்கம் திரும்பி இருப்பதோடு அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான நம்பிக்கையும் உயிர்ப்பித்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகள் பெற்று இருக்கும் பாகிஸ்தான் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இனி வரும் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெற வாய்ப்புகள் இருக்கும். எனினும் அது நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் வெற்றி தோல்விகளை பொருத்தே அமையும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles