ஆள விடுங்க.. கேப்டன்சி விளையாட்டே வேண்டாம்.. டெல்லி துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது யார் பாருங்க

கடந்த 5 சீசன்களாக நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவே விளையாடி வருகிறார். பஞ்சாப் அணியின் கேப்டனாக 2 ஆண்டுகள் செயல்பட்ட அவர், அதன்பின் லக்னோ அணியின் கேப்டனாக 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். அவர் தலைமையில் லக்னோ அணி 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

- Advertisement -

டெல்லி அணியில் கேஎல் ராகுல்

- Advertisement -

ஆனால் கடந்த சீசனில் லக்னோ அணியின் உரிமையாளர் கொயங்கா மைதானத்தில் வைத்தே கேஎல் ராகுலை விளாசி தள்ளினார். இதன்பின் லக்னோ அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேஎல் ராகுல், ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி அணியால் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இதனால் டெல்லி அணியின் புதிய கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.

- Advertisement -

இதுதொடர்பாக கேஎல் ராகுல் உடன் டெல்லி அணி நிர்வாகம் பேச்சுவார்த்தையும் நடத்தியது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக டெல்லி அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நியமனம் செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

துணை கேப்டன் யார்?

- Advertisement -

இருப்பினும் டெல்லி அணியின் துணைக் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஏனென்றால் அக்சர் படேல் காயமடையும் போது, டெல்லி அணியை வழிநடத்த கேஎல் ராகுல் சரியானவராக இருப்பார் என்று பார்க்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லி அணியின் துணைக் கேப்டன் பொறுப்பு ஃபாஃப் டூ பிளசிஸ்-க்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக கேஎல் ராகுல் எந்த வகையான கேப்டன் பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. சாதாரண வீரராக கேஎல் ராகுல் விளைடாட விரும்புகிறார் என்பதும் புரிகிறது. இதற்கு கேஎல் ராகுலின் கேப்டன்சி அனுபவமும், அதனை சுற்றியுள்ள அரசியலுமே காரணம் என்று கூறப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles