சிஎஸ்கே மும்பை இல்லை.. இந்த வாட்டி இந்த டீம் கப் ஜெயிக்கணும்.. ரெய்னா அதிரடி பேட்டி

17 வது ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியைக் காண இரு அணிகளும் மிகத் தீவிரமாக ஆயத்தமாகி வரும் நிலையில், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதில் சென்னை அணி ஐந்து முறை சாம்பியன் பட்டங்களை வென்று ஐபிஎல்லில் அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்து வருகிறது.

- Advertisement -

இதற்கு மிக முக்கியக் காரணம் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவரது கேப்டன்சி நுணுக்கமும், பேட்டிங் அணுகுமுறையும் சென்னை அணி தொடர்ந்து வெற்றிகரமான அணியாக செயல்பட முக்கியக் காரணமாக அமைந்து வருகிறது. 2024 சீசன் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்பதால் இம்முறையும் சென்னை அணி கோப்பையை வெல்ல அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

- Advertisement -

அதற்குத் தகுந்தவாறு ஏலத்திலும் சிறப்பான வீரர்களைத் தேர்வு செய்து அணியை பலமாகக் கட்டமைத்துள்ளது. ஐபிஎல்லில் மற்றொரு வலுவான அணியாகக் கருதப்படுவது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். இந்த அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு வந்த போதிலும் ஒரு முறை கூட கோப்பையைக் கைப்பற்ற முடியாத சோகம் தொடர்ந்து நீடிக்கிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜாம்பவான் விராட் கோலி பெங்களூர் அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். கேப்டனாக இருந்த போதும், கேப்டனாக அல்லாமல் ஒரு வீரராக அணியில் நீடித்த போதும் தன்னால் முடிந்ததை அணிக்கு 100 சதவீத பங்களிப்பை அணிக்காக வழங்கி வருகிறார். எனவே அவருக்காகவாவது பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஏங்குகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சிஎஸ்கே அணியின் ஜாம்பவானுமான சுரேஷ் ரெய்னா 2024 ஐபிஎல் பட்டத்தை வெல்லப் போகும் அணி குறித்தும், மற்றும் தனக்குப் பிடித்தமான வீரர் குறித்தும் சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

“விராட் கோலி ஐபிஎல் பட்டத்தினை வெல்ல தகுதியான வீரர் என்று நான் நினைக்கிறேன். பல வருடங்களாக விராட் கோலி ஆர்சிபி அணிக்காக நம்ப முடியாத வகையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் தனது இதயத்தையும் ஆன்மாவையும் ஆர்சிபி அணிக்காக கொடுக்கிறார். இம்முறை ஐபிஎல் பட்டத்தினை வெல்ல விராட் கோலி தகுதியான வீரராக இருப்பார்” என்று சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.

விராட் கோலி ஆர்சிபி அணிக்காக 16 சீசன்களில் 237 போட்டிகளில் விளையாடி ஏழு சதங்கள் மற்றும் 50 அரை சதங்களை அடித்துள்ளார். 130 பேட்டிங் சராசரியில் 7263 ரன்கள் குவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles