பும்ரா ஸ்டார்க் இல்ல.. இவர்தான் 2023 WC-ல் அதிக விக்கெட் எடுக்கப் போறார்.. வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் ரிச்சர்ட்ஸ் உறுதி.!

2023 ஆம் வருடத்திற்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கும் நாட்கள் நெருங்கி வரும் நிலையில் இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுக்கும் வீரர் யார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரர் யார் என்ற கருத்துக் கணிப்புகள் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது .

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவராக இருப்பவர் சர் விவியன் ரிச்சர்ட்ஸ். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மனான ரிச்சர்ட்ஸை கண்டு நடுங்காத பந்துவீச்சாளர்களே இல்லை என்று கூறலாம். எழுபதுகளின் மத்தியில் இருந்து 80 களின் பிற்காலம் வரை கிரிக்கெட் உலகில் முடி சூடா மன்னனாக விளங்கியவர்.

- Advertisement -

சமகாலங்களில் சாம்பியன் வீரர்களாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா போன்ற பல வீரர்களுக்கும் ரோல் மாடலாக இருந்தவர் ரிச்சர்ட்ஸ். இவர் சமீபத்திய ஐசிசி சேனலுக்கு அளித்த பேட்டியில் நடைபெற இருக்கும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்களை வீழ்த்தப் போகும் பந்துவீச்சாளர் யார் என தெரிவித்திருக்கிறார். மேலும் இவர் தேர்ந்தெடுத்து இருக்கும் பந்துவீச்சாளர் குறித்து வெகுவாக பாராட்டியும் பேசியிருக்கிறார் கிரிக்கெட் ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் .

- Advertisement -

ரிச்சர்ட்ஸ் பாகிஸ்தான் அணியின் இளம் பேகப்பந்துவீச்சாளரான ஷாகின் ஷா அப்ரிதியை உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் என குறிப்பிட்டதோடு இந்தியாவில் நடைபெற இருக்கும் 13 வது உலகக்கோப்பையில் அதிக விக்கெட் களை வீழ்த்தப் போகும் வீரர் இவர் தான் என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் பிஎஸ்எல் கிரிக்கெட் தொடரில் சில காலம் ஆலோசகராக பணியாற்றிய போது ஷாஹின் ஷா அப்ரிதியை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்றும் கிரிக்கெட் விளையாட்டின் மீதான அவருக்கு இருக்கும் தாகம் மற்றும் அவரது திறமையின் காரணமாக இன்று உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இளம் வயதிலேயே உருவெடுத்து இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசி இருக்கும் ரிச்சர்ட்ஸ்” இந்த உலகக்கோப்பையில் ஷாஹீன் அப்ரிதி அதிக விக்கெட்களை வீழ்த்துவார் என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் நான் பிஎஸ்எல் கிரிக்கெட் தொடரில் பணியாற்றிய போதுஅவரது வளர்ச்சியை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கிரிக்கெட்டின் மீது தீராத நேசம் கொண்ட ஒரு இளம் வீரர் அவர். பந்துவீச்சாளர்களில் அவர் தான் என்னுடைய விருப்பமான வீரர்” என்று தெரிவித்துள்ளார் .

- Advertisement -

23 வயதான ஷாகின் அப்ரிதி பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகள் 39 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 52 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிருக்கிறார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 105 விக்கெட்களையும் ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் முறையே 76 மற்றும் 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

சமீபத்தில் இலங்கையில் வைத்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அந்தத் தொடரின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராகவ வலம் வந்தார். மேலும் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போது இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே இன் ஸ்விங் யார்கர் மூலம் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட் கை வீழ்த்திய வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles