ரோஹித் vs ஹார்த்திக்.. இரண்டாக உடைகிறதா மும்பை இந்தியன்ஸ் அணி.?. வெளிவரும் புதிய தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாக பிளவு பட்டிருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளி வருகிறது.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்தது. பின்னர் குஜராத் அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை அணி வாங்கி புதிய கேப்டனாக நியமித்தது.

- Advertisement -

அன்றிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சில சச்சரவுகள் வெளிவரத் தொடங்கின. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது அந்த அணியின் முன்னணி வீரர்களான பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு விருப்பம் இல்லாமல் இருப்பது போல் தெரிந்தது. இதனை சூரியகுமார் யாதவ் வெளிப்படையாகவே தனது சமூக வலைதளத்தில் இதயம் உடைந்தது போன்ற புகைப்படத்தை பதிவிட்டார்.

- Advertisement -

மேலும் பும்ரா போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அணி நிர்வாகத்துடன் இணைந்து இருக்கிறார். மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேப்டன்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாக ஹர்திக் பாண்டியாவும், பயிற்சியாளர் மார்க் பவுச்சரும் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் மும்பை அணி முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது.

ஒரு முனையில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்ப, மறுமுனையில் ரோகித் சர்மாவும் பும்ராவும் பாண்டியாவின் முடிவுகளுக்கு ஒப்புக்கொள்ளாமல் வாதங்களை எழுப்பினர். இந்த நிலையில் போட்டியும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின்னர் ஹர்திக் பாண்டியா, இசான் கிசான் ஆகியோர் ஒரு குழுவாகவும் ரோகித் சர்மா, பும்ரா ஆகிய வீரர்கள் தனியாக இருப்பதும் காண முடிந்தது.

- Advertisement -

ஒரு குழுவாக இருந்த ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் திலக் பர்மா ஆகியோர் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து விவாதங்களை எழுப்பியது போல் தோன்றியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் இரு பிரிவுகள் இருப்பதாகவும் ஒரு பிரிவில் ஹாதிக் பாண்டியா மற்றும் இசான் கிசான் ஆகியோரும், மறுபிறவில் ரோஹித் சர்மா, பும்ரா, திலக் வர்மா ஆகியோர் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் விதமாக போட்டி முடிந்த பின்னர் ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவிடம் பேச முயன்றார். அப்பொழுது ரோகித் சர்மா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது. எனவே இந்த நிகழ்வு உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றுகிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைக் கேட்ட மும்பை அணி ரசிகர்கள் தற்போது அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles