2024 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு மிகவும் வலுவான அணி என்று கருதப்பட்டது மும்பை இந்தியன்ஸ். அந்த அளவிற்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று ஏலத்தில் இரண்டுக்கும் சரிசமமான வீரர்களை எடுத்து அணியை வலுவாக கட்டமைத்திருந்தது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்.
மேலும் குஜராத் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை அணிக்கு அழைத்து வந்து கேப்டனாகவும் பதவி ஏற்க வைத்தது. ஹர்திக் பாண்டியா ஏற்கனவே குஜராத் அணியில் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தவர் மற்றும் அதற்கு அடுத்த ஆண்டில் குஜராத் அணி இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தவர். அதனால் இந்த முறை ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இங்கு தற்போது நடந்துள்ளது வேறு. கடந்த சீசனில் சிறப்பாக பந்து வீசிய ஆகாஷ் மத்வாலை நீக்கிவிட்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட புதிய வீரர்களை களமிறக்கினர். மேலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட வதேராவுக்கு பதிலாக நமன் திர் உள்ளே கொண்டுவரப்பட்டார். கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட நமன் திர் கடந்த போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
பந்துவீச்சிலும் பவர் பிளேவில் பும்ராவுக்கு ஓவர் கொடுக்கப்படாமல் புதிய மாற்றங்களை செய்து ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தது. இதெல்லாம் தோல்விக்கு காரணங்களாக பார்க்கப்படும் நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்களின் எதிர்ப்பும் தற்போது அதிகளவில் இருந்து வருகிறது. வெளி மைதானங்களில் இவ்வாறு என்றால் நேற்று நடந்த மும்பை மைதானத்திலும் இதே நிலைமைதான்.
இதனால் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு எதிர்மறையான சூழல் உருவாகி இருப்பது கண்கூடாக தெரிகிறது. எனவே இவற்றையெல்லாம் கடந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப என்ன செய்யலாம் என்று மும்பை அணி யோசித்து வரும் வேளையில் இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது
” வெற்றிக்கு நிகரான வெற்றி என்பது எதுவுமே கிடையாது. மும்பை இந்தியன்ஸ் அணி தோல்விக்கு பதிலாக வெற்றி பெற்றிருந்தால் பாண்டியாவுக்கு எதிராக தற்போது எதுவுமே நிகழ்ந்திருக்காது. எனவே பாண்டியா அணிச்சேர்க்கையில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு போட்டியில் 277 ரன்கள் விட்டுக் கொடுக்கும் பொழுது உங்களது பந்துவீச்சை பார்த்து அனைவரும் அலறுகிறார்கள். எனவே இந்த விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இதையும் படிங்க:கேமரூன் கிரீனை தூக்கிட்டு இவர எடுங்க.. அப்பதான் ஆர்சிபி ஜெயிக்கும்.. ஸ்டூவர்ட் பிராட் ஓபன் டாக்
இந்த விஷயத்தில் மகேந்திர சிங் தோனியை பார்க்க வேண்டும். 2023ஆம் ஆண்டு சென்னை அணியின் அதிக ரன் குவித்தவர் ஆன கான்வே காயம் காரணமாக 2024ஆம் ஆண்டு விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரச்சின் ரவிந்த்ரா சரியான மாற்றுவீராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எனவே ஹர்திக் பாண்டியாவும் இதில் கவனம் செலுத்தி சரியான மாற்று வீரரை கண்டுபிடிக்க வேண்டும். மேலும் மும்பை அணிக்கு ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்தவரான ரோகித் சர்மாவிடம் கேப்டன்சியை பறித்து வேறு ஒருவருக்கு கொடுத்தால் எதிர்மறையான விமர்சனங்களே எழும். இந்த விஷயத்தில் ரசிகர்களை குற்றம் சொல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார்.

