நாங்க என்னப்பா பண்றது நெருப்பு பந்துகளையா வீச முடியும்.. எங்களால சிஎஸ்கேவை சமாளிக்க முடியல – ஹர்திக் பாண்டியா பேச்சு

சிஎஸ்கே புத்திசாலித்தனமாக விளையாடியதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறி இருக்கிறார். நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் முதல் பத்து ஓவரில் பேட்டிகளில் நல்ல ரன்கள் எடுத்து வலிமையாக இருந்த மும்பை இந்தியன்ஸ் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் மற்றும் கார்த்திக் சர்மா இருவரும் அரை சதங்கள் அடித்து அணியை எளிதாக வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசும்போது ” நாங்கள் முதல் 10 ஓவரின் சிறப்பாக இருந்தோம் ஆனால் தொடர்ந்து அந்த வேகத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. எங்கள் பேட்ஸ்மேன்கள் பந்தை உயர்த்திற்கு அடிக்க முடியவில்லை. எங்களை விட அவர்களுடைய பௌலிங் யூனிட் மிகவும் சிறப்பாக விளையாடியது”

- Advertisement -

“மேலும் சிஎஸ்கே மிகவும் புத்திசாலித்தனமாக பேட்டிங் செய்தது. நாங்கள் இன்னும் எவ்வளவு ஆக்ரோஷமாக இருப்பது. அவர்கள் மீது நெருப்பு பந்துகளை வீச வேண்டும் போல” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles