ஆட்டம் இன்னும் முடியல தம்பிகளா.. கொஞ்சம் அழுத்தமும், பிட்சில் ஒத்துழைப்பும் இருந்தால்.. பஞ்சாயத்தை தொடங்கிய மோர்கல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும். இல்லையென்றால் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்திக்கும். இந்த நிலையில் 4ஆவது நாள் ஆட்டம் முடிவு இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

- Advertisement -

மோர்கல் பேட்டி

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்கை நிர்ணயித்திருக்கும் சூழலில், அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களுடன் களத்தில் உள்ளது. ஹாரி ப்ரூக் மற்றும் ரூட் இருவரும் சதம் விளாசி அவுட்டாகினர். இதனால் ஜேமி ஸ்மித் – ஓவர்டன் இணை புதிதாக களத்தில் இருந்தது. திடீரென மழை பெய்யத் தொடங்கியதால், 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 

- Advertisement -

இந்த சூழலில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 35 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு 3 விக்கெட்டுகளும் தேவையாக இருக்கின்றன. இதனால் 5ஆவது நாளில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேசும் போது, இந்த டெஸ்ட் முழுக்கவே இரு அணிகளும் மாறி மாறி போராடி வருகின்றன. 

- Advertisement -

முகமது சிராஜிக்கு பாராட்டு

கடைசி போட்டியின் 4ஆவது நாளிலும் அப்படியான சூழல் அமைந்திருக்கிறது. இந்திய அணி பவுலர்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்திருக்கிறார்கள். ஆனால் திடீரென மழை பெய்ய தொடங்கியதால், ஆட்டம் 5ஆவது நாளுக்கு சென்றிருக்கிறது. அதற்காக வெள்ளைக் கொடியை காட்டிவிட முடியாது. கொஞ்சம் அழுத்தத்தை ஏற்படுத்தினாலே போதும். ஆட்டத்தை இந்திய அணியால் மாற்ற முடியும். 

4ஆவது நாளில் ஆகாஷ் தீப்பால் மட்டும் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ய முடியவில்லை. ஆனால் ஒரு மேஜிக் ஸ்பெல்லை வீசுவார். முகமது சிராஜ் இயற்கையாகவே ஒரு நல்ல தலைவர். அவரின் பங்களிப்பை அனைவரும் பாராட்டி அடையாளப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டம் இன்னும் முடியவில்லை. 5வது நாளில் என்ன முடிவு வேண்டுமானாலும் வரும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles