மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதேபோல் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் குஜராத் அணிக்காக ஆடிய ஹர்திக் பாண்டியா, மும்பை அணியை பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார்.

- Advertisement -

இருப்பினும் ரோகித் சர்மா ஓய்வுபெறுவதை மனதில் வைத்து ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை அணிக்குள் கொண்டு வரப்பட்டார். இதனால் விரைவில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென நேற்று மாலையே அந்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது மும்பை அணி.

- Advertisement -

10 ஆண்டுகளில் மும்பை அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு காரணமாக அமைந்தவர் ரோகித் சர்மா. அதேபோல் இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு பின் அதிக ரசிகர்களை கொண்டு வீரராக ரோகித் சர்மா இருக்கிறார். அவர் இருக்கும் போது இன்னொரு கேப்டனுக்கு கீழ் ஐபிஎல் தொடரில் விளையாட வைப்பது சரியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

இதனால் நேற்று மாலை முதலே மும்பை அணியும், அம்பானி என்ற ஹேஷ்டாக்கும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது. ஹர்திக் பாண்டியாவின் பழைய பேச்சுகளின் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். ஆனால் இன்னொரு பக்கம் மும்பை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுக்கு ரசிகர்கள் ஏற்கும் வகையில் கருத்து பதிவிட்டனர்.

இதனிடையே மும்பை அணியின் ரசிகர்கள் விரக்தியில் அந்த அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்வதை நிறுத்தி வருகின்றனர். ரோகித் சர்மா கேப்டன்சி அறிவிப்பு வருவதற்கு முன்பாக 13.5 லட்சமாக இருந்த பின்தொடர்வோரின் எண்ணிக்கை, அறிவிப்பு வந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போனது.

- Advertisement -

அடுத்த சில மணி நேரங்களில் 1.5 லட்சம் பேர் மும்பை அணியை பின் தொடர்வதை நிறுத்தினர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரோகித் சர்மாவின் பவர் இதுதான் என்று அவரின் ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மும்பை அணியை பின் தொடர்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால், இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்காளை கொண்ட அணியாக சிஎஸ்கே அணி உருவெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here