நம்ப வைத்து ஏமாற்றுவதை மறக்க இயலாது.. ஹார்திக் பாண்டியா கேப்டன் ஆனதை பொறுத்துக்க இயலாத சூர்யகுமார் யாதவ்

இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்திற்கு முன்பு மிகப் பெரிய டிரேடிங் நடந்துள்ளது. புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவர் ஹார்திக் பாண்டியா மீண்டும் தன் பழைய அணியான மும்பை இந்தியன்ஸ்க்கு திரும்பியுள்ளார். இருமுறை குஜராத் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று ஒரு முறை கோப்பையும் வென்ற அவர் அணியைவிட்டு விலகுவது குஜராத் அணிக்கு பின்னடைவே.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சர்வதேச அளவு சிறந்த ஆல்ரவுண்டராக முன்னேரியவர் ஹார்திக் பாண்டியா. மீண்டும் அவர் அணிக்கு திரும்பியது மும்பை இந்தியன்ஸ்க்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. மேலும் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி தன் புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை அறிவித்தது.

- Advertisement -

பத்து ஆண்டுகள் மும்பை அணியை தலைமை தாங்கி 5 கோப்பைகள் வென்ற ரோஹித் ஷர்மா தன் கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹார்திக் பாண்டியாவுக்கு வழி வகுத்துள்ளார். ரோஹித் சர்மாவுக்கு வருகின்ற ஐ.பி.எலில் 38 வயதாகிவிடும். அதனைக் கருதி அடுத்த 5 – 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்க சரியான வீரராக ஹார்திக்கை இப்போதே அப்பதவியில் அமர்தியுள்ளது அணி நிர்வாகம்.

- Advertisement -

இது ரசிகர்களை மட்டுமில்லாமல் அணியில் இருக்கும் மற்ற சீனியர் வீர்ரகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹார்திக் சில தினங்களுக்கு முன்பு மும்பை திரும்பிய போதே அவருக்கு கேப்டன்சி கொடுக்கப்படும் என்பதை உணர்ந்த பும்ரா தன் சமூக வலைத்தளத்தில் ‘ அமைதி ’ எனக் குறிப்பிட்டார். ரோஹித்துக்கு அடுத்து அவருக்கு அப்பதவி கிடைக்கும் என அவர் ஆசைப்பட்டார் என்பது தெளிவாக தெரிந்தது.

இன்று மற்றொரு வீராரான சூரியகுமார் யாதவ் தன் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஏமாற்றமாக பதிவிட்டுள்ளார். தற்போது சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய டி20ஐ அணியை வழிநடத்தி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-1 மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 1-1 என ஆதிக்கம் செலுத்தினார். சென்ற சீசனில் கூட ரோஹித் இல்லாத பட்சத்தில் அவர் தான் பொறுப்பேற்றார்.அதனால் அணி நிர்வாகம் அவருக்கு பொறுப்பை வழங்கும் என நம்பி ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் உடைந்த இதயத்தை பதிவிட்டு வருந்தினார். அதுமட்டுமில்லாமல் சூரியகுமார் யாதவின் மனைவி தேவிஷா ஷெட்டி இன்ஸ்டாகிராமில், “ நீங்கள் ஒருவரை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது எப்போதும் நினைவில் இருக்கும் ” என தன் பங்கிற்கு பதிவிட்டுள்ளார்.

அணியை விட்டு விலகிய வீரர் திடீரென மீண்டும் வந்து மற்ற சீனியர் வீரர்களின் கனவை சுக்குநூறாக உடைப்பத் கஷ்டமான செய்து தான். அடுத்த கேப்டன் என என்னதான் கனவு கண்டால் இறுதியில் இது அனைத்தும் நிர்வாகத்தின் விருப்பத்தின் படியே நடக்கும். மறுபக்கம் ஹார்திக் பாண்டியா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டாலும் ஓய்வு பெறும் முன்பே ரோஹித் சர்மாவின் பொறுப்பை கைமாற்றுவதை மும்பை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ரோஹித் ரசிகர்கள் தங்களது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles