ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பேட் கம்மின்ஸின் வருகைக்குப் பிறகு மீண்டும் தன் ஆதிக்கத்தை உலகிற்கு காட்டி வருகிறது. ஒரே ஆண்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை நம் இந்திய அணிக்கு எதிராக வென்றது. இரண்டுமே அயல்நாட்டு மைதானங்களில் என்பது இன்னும் பாரட்டகுறியது.
2023 – 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போய்க் கொண்டிருக்கிறது. இதில் சொந்த ஆடுகளத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது ஆஸ்ட்ரேலிய அணி விளையாடி வருகிறது. விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் முதல் டெஸ்ட்டில் இருதரப்பும் பேட்டிங் ஆடுகளத்தில் ரன்களை குவிகின்றனர்.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 2025ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளனர் ஆஸ்திரேலியா வீரர்கள். சில திங்களுக்கு முன்னர் தேர்வு குழுவினர் முன்னிலையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் இடம்பெற விண்ணப்பித்துள்ளார்.
மேக்ஸ்வெல் குறிப்பிட்டதாவது, “ நடப்பு ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ். சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இங்கு நான் நிறைய முதல் தர கிரிக்கெட் விளையாடியுள்ளேன் என்பதால் உள்நாட்டில் டெஸ்ட் விளையாடுவது நன்றாக இருக்கும். ”
“ ஆனால் அணியில் தற்போது நான் நிரப்புவதற்கு இடங்கள் காலியாக இல்லை. அதே சமயம் ஆசியாவில் அணிக்கு என்னுடைய இருப்பு நல்லதொரு பயனாக இருக்கும் என நான் நம்புகிறேன். ” என்றார். அவரின் விருப்பத்தை முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாக எதிர்த்துள்ளார். மேக்ஸ்வெல் அணியில் இடம்பெறுவதை அவர் சுத்தமாக ஒத்துழைக்கவில்லை.
இது குறித்து ரிக்கில் பாண்டிங் பதில் கூறியதாவது, “ ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பெறுவது அவ்வளவு சாமான்ய விஷயம் இல்லை. முதல் தர கிரிக்கெட்டில் ஒரு டிரக் லோட் அளவு ரன்களை குவிக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் மேக்ஸ்வெல் ஒரு வேளை மீண்டும் முதல் தர கிரிக்கெட்டுக்கு சென்று அவ்வாறு ரன்கள் அடித்தால் டெஸ்ட் அணியில் இடம்பெறலாம். ”
மேக்ஸ்வெல் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி வெறும் 7 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார். வங்கதேச அணிக்கு எதிராக 2017ஆம் ஆண்டு கடைசியாக சிவப்பு நிறப் பந்து கிரிக்கெட்டில் தென்பட்டார். நடப்பு ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே பல தரமான வீரர்கள் 11 இடங்களில் மாறி மாறி ஆடி வருகிறார்கள். இந்த வேளையில் மேக்ஸ்வெல் மீண்டும் கம்பேக் கொடுப்பது மிகவும் கடினமான காரியம்.

