ஆடுனது 2 போட்டிதான்.. மீண்டும் காயம் அடைந்த மயங்க் யாதவ்.. நியூசிலாந்து வீரரை நாடிய லக்னோ அணி

ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. 10 அணிகளிலும் வெளிநாட்டு வீரர்கள் சிலர் மீண்டும் இந்தியா வர வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் மே 25ம் தேதிக்கு பின் சொந்த ஊர் புறப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 

- Advertisement -

லக்னோ அணிக்கு சிக்கல்

இதனால் அதிகம் பாதிக்கப்படும் அணிகளில் லக்னோ அணியும் ஒன்றாகும். ஏனென்றால் மிட்சல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர் ஆகியோர் இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதற்கான மாற்று வீரர்களை கண்டறிய முடியாமல் லக்னோ அணி திண்டாடி வருகிறது. லக்னோ அணியை பொறுத்தவரை 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் உள்ளது. 

- Advertisement -

எஞ்சிய 3 போட்டிகளில் மூன்றிலும் வென்றால் மட்டுமே லக்னோ அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த சூழலில் இளம் நட்சத்திர வீரரான மயங்க் யாதவ் காயம் காரணமாக விலகி இருக்கிறார். ஏற்கனவே முதல் 7 போட்டிகளில் காயம் காரணமாக மயங்க் யாதவ் விளையாடாமல் இருந்தார். அந்த இடத்தை எளிதாக ஷர்துல் தாக்கூர் நிரப்பினார்.

- Advertisement -

மயங்க் யாதவ் காயம்

இதன்பின் 2 போட்டிகளில் மயங்க் யாதவ் களமிறங்கிய நிலையில், மீண்டும் காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மயங்க் யாதவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் மயங்க் யாதவ் இடத்தில் விளையாடுவதற்கு நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் வில்லியம் ஓரூர்க்கை லக்னோ அணி அணுகி இருக்கிறது.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வில்லியம் ஓரூர்க் மிகச்சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் ஓரூர்க் அசத்துவார் என்று பார்க்கப்படுகிறது. மேலும், டெல்லி அணியின் மிட்சல் ஸ்டார்க் இந்திய அணி திரும்ப முடியாது என்று கூறிய நிலையில், அவரது இடத்தில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles