உங்க வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி.. நான் சொல்ற இதை மட்டும் கேளுங்க.. இளம் வீரர்களுக்கு எம் எஸ் தோனி அறிவுரை

19 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இன்னும் ஒரு இரு நாட்களில் நடைபெற உள்ள நிலையில் ஆறாவது கோப்பையை கைப்பற்றுவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி இன்னும் ஒரு சீசன் விளையாட இருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மகேந்திர சிங் தோனி தலைமையில் இதுவரை 5 கோப்பைகளை வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே ஆறாவதாக ருத்ராஜ் தலைமையில் கைப்பற்ற ரெடியாகி வருகிறது.

- Advertisement -

எப்போதுமே களத்தில் எந்த மாதிரியான அழுத்தமான சூழ்நிலை வந்தாலும் அமைதியாக முடிவெடுத்த தோனி அதில் வெற்றியும் பெறுவார். கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாமல் தனது சொந்த வாழ்க்கையிலும் தன்னை இயல்பாக வைத்துக் கொள்ளும் எம் எஸ் தோனி இளம் தலைமுறை இளைஞர்களுக்கு அழுத்தமான சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்று சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து தோனி கூறும் போது “நான் என்னுடைய வாழ்க்கையை எளிதாக எப்பவுமே வைத்திருக்க விரும்புகிறேன். நம்மை சுற்றியுள்ளவர்கள் எப்போதுமே ஒரு விதமான அழுத்தத்தில் இருப்பார்கள். முகத்தில் புன்னகையோடு இருப்பது தான் எப்போதுமே இங்கு கடினமான விஷயமாக இருக்கிறது. சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சரி வாழ்க்கை கடினமாக இருந்தாலும் சரி, அதை 100% முழுமையாக அனுபவியுங்கள். ஆனால் உங்களது உழைப்பை முழுமையாக கொடுத்து கிடைக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles