புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.. பவர்பிளேவில் 4 விக்கெட்டை பறிகொடுத்துவிட்டோம்.. தோல்விக்கு பின் ரஹானே பேட்டி

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அனி 16.2 ஓவர்களில் 116 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 12.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

- Advertisement -

கடைசி இடத்தில் கேகேஆர்

இதனால் கேகேஆர் அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 3 போட்டிகளில் விளையாடியுள்ள கேகேஆர் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் இருக்கிறது. இதனால் புள்ளிப்பட்டியலில் கேகேஆர் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கேகேஆர் அணியின் ரன் ரேட்  -1.428 ஆக மாறி இருக்கிறது.

- Advertisement -

இந்த தோல்வி குறித்து அஜிங்கியா ரஹானே பேசும் போது, ஒட்டுமொத்தமாக பேட்டிங்கில் சொதப்பிவிட்டோம். டாஸில் சொல்லியதை போல் இது பேட்டிங் செய்வதற்கு சிறந்த விக்கெட் தான். இந்த பிட்சில் 180 முதல் 190 ரன்களை சேர்க்க முடியும். இந்த பிட்சில் நல்ல பவுன்ஸ் இருக்கிறது. சில நேரங்களில் வேகம் மற்றும் பவுன்ஸை பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

ரஹானே பேட்டி

டி20 கிரிக்கெட்டில் இருந்து நாம் விரைவாக கற்றுக் கொள்ள வேண்டும். பவுலர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. அவர்கள் முடிந்தவரை முயற்சி செய்தார்கள். ஆனால் போதுமான அளவிற்கு ரன்கள் சேர்க்கவில்லை. பேட்டிங்கின் போது தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்து கொண்டே இருந்தோம். பவர் பிளேவில் மட்டும் 4 விக்கெட்டை இழந்தோம். 

அதனை சமாளித்து சிறந்த இலக்கை நிர்ணயிப்பது எளிதான விஷயம் கிடையாது. ஏனென்றால் பார்ட்னர்ஷிப் உருவாகினால் மட்டுமே ரன்களை சேர்க்க முடியும். ஒரு பேட்ஸ்மேன் 20 ஓவர்கள் முழுவதும் களத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சாம்பியன் அணியான கேகேஆர் அணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles