இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்த போது, இந்திய அணி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முகமது சிராஜ் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலமாக இந்த டெஸ்ட் தொடரில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை முகமது சிராஜ் பெற்றுள்ளார். மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். தொடர்ந்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சிராஜிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
சிராஜ் பேட்டி
இதனைத் தொடர்ந்து முகமது சிராஜ் பேசும் போது, இந்த தருணம் அற்புதமாக உள்ளது. முதல் நாளில் இருந்தே அனைவரும் கடுமையாக போராடினோம். அதற்கான முடிவுகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களின் திட்டத்தை எளிமையாக வைத்துக் கொண்டோம். ஒரே இடத்தில் கன்சிஸ்டன்சியுடன் பிட்ச் செய்வதுதான் அதும்.
பெரிதாக வித்தியாசமாக செய்ய வேண்டாம். ஒருவேளை விக்கெட் கிடைத்தால் போனஸ் என்று மட்டுமே நினைத்தோம். அவர்கள் 35 ரன்கள் சேர்த்தாலும், அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இன்று காலை எழுந்த போது, என்னால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். எனக்கென்று ஒரு நம்பிக்கை உள்ளது.
ஜடேஜாவின் அட்வைஸ்
திடீரென கூகுளுக்கு சென்று ஒரு புகைப்படத்தை தேர்வு செய்து, அதனை முகப்புப் படமாக வைப்பேன். அது இன்று வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் ஹாரி ப்ரூக் கேட்சை பிடித்திருந்தால், இன்றைய நாளுக்கு ஆட்டம் வந்திருக்காது. அதுதான் ஆட்டத்தை மாற்றிய தருணமாக மாறிவிட்டது. அதன்பின் ப்ரூக் மிகச்சிறப்பாக விளையாடி அட்டாக் செய்தார்.
லார்ட்ஸ் மைதானத்தில் அடைந்த தோல்வியால் மனமுடைந்துவிட்டேன். அப்போது ஜடேஜா என்னிடம் பேட்டை நேராக வைத்து விளையாடுமாறு கூறினார். மிடிலில் பந்தை எதிர்கொள் என்றும் அறிவுறுத்தினார். அதுமட்டுமல்லாமல் இந்த இடத்திற்கு முன்னேறி வருவதற்கு காரணமாக இருந்த தந்தையை நினைக்க வைத்துவிட்டதாக தெரிவித்தார்.

