17வது ஐபிஎல் சீசன் தொடர் சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் ருத்ராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளில் இரு பெரும் நட்சத்திரங்களான மகேந்திர சிங் தோனியும், விராட் கோலி இருப்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானம் என்பதால் தற்போது சென்னை அணியின் கையே சற்று ஓங்கி இருக்கும். இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபடும் என்பதால் ரவீந்திர ஜடேஜா, தீக்சானா மற்றும் மொயின் அலி ஆகியோர் பந்துவீச்சில் பெரும் பங்கு வகிப்பார்கள். எனினும் வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை துஷார் தேஷ் பாண்டே மற்றும் வங்காளதேச அணியின் முஸ்தபிகுர் ரகுமான் ஆகியோர் இருக்கின்றனர்.
மேலும் பேட்டிங்கில் ரஹானே, ரச்சின் ரவீந்திரா, கெயிக்வாட், சிவம் துபே, மகேந்திர சிங் தோனி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே அணியில் இருக்கிறது. மேலும் இது எம்.எஸ். தோனியின் கடைசி சீசன் ஆக இருக்கும் என்பதால், சென்னையில் நடக்கும் ஒவ்வொரு போட்டியையும் காண ரசிகர்கள் மைதானத்திற்கு ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் தோனி தனது கேப்டன்சியயும் விட்டு விலகி விட்டதால், இந்த தொடரில் மிகவும் ரிலாக்ஸான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார்.
எனவே இதற்கான டிக்கெட் முன்பதிவு சில நாட்களுக்கு முன்னால் தொடங்கிய நிலையில், அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்று தீர்ந்து விட்டன. எனவே டிக்கெட் வாங்கிய அனைத்து ரசிகர்களும் தற்போது போட்டியை காண ஆவலாக உள்ளனர்.
எனினும் சில மணி நேரங்களிலேயே டிக்கெடுகள் வெற்றி தீர்ந்து விட்டதால், டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே அவர்களுக்கு தற்போது ஒரு நற்செய்தியாக வருகிற 2ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 23ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூர் அணிகள் மோதும் போட்டியின் டிக்கெட் விலையை காட்டிலும் இந்த போட்டியின் டிக்கெட் விலை சற்று குறைந்திருக்கிறது. மைதானத்தின் சி, டி, இ கீழ்தளத்தில் உள்ள ஸ்டாண்டிற்கு டிக்கெட் விலை 1700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல சி, டி, இ மேல் தளத்தில் ஸ்டாண்டுக்கு டிக்கெட் விலை 2500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஐ, ஜே, கே கீழ்தளத்தில் உள்ள ஸ்டாண்டுக்கு டிக்கெட்டின் விலை 4000 ஆகவும், ஐ, ஜே, கே மேல் தளத்தில் உள்ள ஸ்டாண்டுக்கு டிக்கெட்டின் விலை ₹3,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விஐபிகள் அமரும் கே, எம், கே ஸ்டாண்டிற்கு டிக்கெட் விலை 6000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டிக்கெட் வாங்க விரும்பும் ரசிகர்கள் 23ஆம் தேதி பேடிஎம் இன்சைடர் ஆன்லைன் தளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

