17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த மோசமான தோல்விக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டுமல்ல மும்பை அணி வீரர்களும்தான் காரணம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் தான் கூறியிருக்கிறார்.
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிகராக வெற்றிகரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 கோப்பைகளை பெற்றுள்ளது. அந்த ஐந்து ஐபிஎல் கோப்பைகளையும் ரோகித் ஷர்மாவின் தலைமையிலேயே வென்றுள்ளது.
2020ஆம் ஆண்டிற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான தோல்விகளைப் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் தவித்தது. இந்த மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அதிலும் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. ரோகித் சர்மாவின் தலைமையில் இந்த மோசமான தோல்வியை சந்தித்த பிறகு கேப்டன்ஷிப்பை மாற்ற நினைத்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு இழுத்து கேப்டனாக நியமித்தது.
இந்த ஆண்டு புதிய கேப்டன் ஹார்த்திக் பாண்டியாவின் தலைமையில் கீழ் களம் இறங்கிய மும்பை அணிக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுதான் மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது. மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் மூன்று போட்டியில் வெற்றியும், எட்டு போட்டிகளில் தோல்வியும் தழுவி புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது.
இதற்குக் காரணம் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியாவை தங்கள் கேப்டனாக ஏற்றுக் கொள்ளாததே மிக முக்கிய காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது
“மும்பை அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அவரை கேப்டனாக ஏற்றுக் கொள்ளாததே மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு என்பதால் ஹர்திக் பாண்டியாவை அவர்கள் கேப்டனாக ஏற்று இருக்க வேண்டும். கிரிக்கெட் போட்டியை பொருத்தவரை கேப்டன் மற்றும் நிர்வாகம் என்பது மிகவும் முக்கியம். மும்பை அணியின் கதை முடிந்து விட்டது. இந்தத் தோல்வியிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அனைத்து அணி வீரர்களும் அவர்களின் கேப்டன்களை முழு மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:ஷாருக்கானை பார்த்து எல்லை மீறிய விராட் கோலி.. அபராதம் விதிக்குமா பிசிசிஐ?. கோபத்தில் ரசிகர்கள்
இந்த வருடம் மும்பை அணியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரு குழுவாக அவர்கள் இணைந்து விளையாடாததே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது” என்று கூறி இருக்கிறார்.

