ஷாருக்கானை பார்த்து எல்லை மீறிய விராட் கோலி.. அபராதம் விதிக்குமா பிசிசிஐ?. கோபத்தில் ரசிகர்கள்

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் போது குஜராத் அணி வீரர் ஷாருக்கான் ஆட்டமிழந்து வெளியேறிய போது அவரைப் பார்த்து விராட் கோலி சைகை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 52 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி பெங்களூர் அணி வீரர்களின் அபாரமான பந்து வீச்சினை தாக்குப் பிடிக்க முடியாமல் 19.3 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

குஜராத் அணியில் அதிகபட்சமாக ஷாருக்கான் 24 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். பெங்களூர் அணித்தரப்பில் சிராஜ் மற்றும் எஸ் தயால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்ததால் குஜராத் அணி பவர் பிளேவரை மிகவும் எளிதாகவே விளையாடியது.

- Advertisement -

ஆறு ஓவர்களில் 90 ரன்களைக் கடந்த நிலையில் தனது முதல் விக்கட்டை பறி கொடுத்தது. 23 பந்துகளில் 64 ரன்கள் குவித்த நிலையில் டு பிளஸ்சிஸ் வெளியேறினார். அதற்குப் பிறகு 27 பந்துகளில் 42 ரன்கள் குவித்த நிலையில், விராட் கோலி வெளியேற 117 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் அதற்கு பிறகு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.

12 பந்துகளில் மூன்று பவுண்டரிகளுடன் 21 ரன்கள் குவித்த நிலையில், தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தார். இதனால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஒரு சர்ச்சையான சம்பவம் நடைபெற்றது. குஜராத் அணியில் திவாட்டியாவுடன் ஷாருக்கான் இணைந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஷாருக்கான் அடித்த பந்து விராட் கோலியிடம் சென்றது.

- Advertisement -

ஆனால் அதைப் பார்க்காமல் ஷாருக்கான் ஓட விராட் கோலி துல்லியமாக அவர் இருக்கும் திசையை நோக்கி இருந்த ஸ்டம்புகளின் மீது குறி வைத்து எறிந்தார். இதனால் ஷாருக்கான் ஆட்டமிழந்து வெளியேறிய போது பறக்கும் முத்தத்தோடு அவரை வழி அனுப்பி வைத்தார். இதே போல கொல்கத்தா அணி வீரர் ராணா சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இதே சைகையை செய்ததனால் அவருக்கு போட்டித் தொகையில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:டீ குடிச்சிட்டு வர்ற கேப்ல சம்பவம் பண்ணிட்டாங்க.. ஆர்சிபி வெற்றிக்கு பின்னர் பேசிய தினேஷ் கார்த்திக்

தற்போது விராட் கோலியும் இது போன்ற ஒரு சைகையில் ஈடுபட்டு இருக்கிறார். ஐபிஎல் விதிகளின்படி எதிரணி வீரர்களை பார்த்து இவ்வாறு செய்கையில் ஈடுபடுவது விதிகளின்படி தவறாகும். எனவே விராட் கோலிக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். விராட் கோலி ரசிகர்கள் ஒருபுறம் இதைக் கொண்டாடினாலும், மறுபுறம் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் விதிமுறையின் படி இது சட்டப்படி தவறு. எனவே எல்லை மீறிய விராட் கோலிக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles