டீ குடிச்சிட்டு வர்ற கேப்ல சம்பவம் பண்ணிட்டாங்க.. ஆர்சிபி வெற்றிக்கு பின்னர் பேசிய தினேஷ் கார்த்திக்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 13 ஓவர்களில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிக்கட்டத்தில் களமிறங்கி போட்டியை முடித்து வைத்தது குறித்து ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பெங்களூர் அணியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி பெங்களூர் அணி வீரர்களின் அபார பந்துவீச்சு தாக்குப் பிடிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் அணி பவர் பிளேவிற்குள் 19 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஷாருக் கான் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி குஜராத் அணியை ஓரளவு காப்பாற்றியது.

- Advertisement -

24 பந்துகளில் ஷாருக்கான் 37 ரன்கள், டேவிட் மில்லர் 20 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்சர்களுடன் 30 ரன்கள் குவித்தனர். இறுதிக்கட்டத்தில் ராகுல் டிவாட்டியா சிறப்பாக விளையாடி 21 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் இறங்கியது. ஆறு ஓவர்களில் 92 ரன்கள் குவித்த நிலையில் முதல் விக்கெட்டை பறி கொடுத்தது.

- Advertisement -

டு பிளஸ்சிஸ் 23 பந்துகளில் 64 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, அதற்குப் பிறகு விராட் கோலி 42 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். 92 ரன்களுக்குள் முதல் விக்கெட் இழந்த பெங்களூர் அணி அடுத்த 117 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் அதற்குப் பிறகு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 12 பந்துகளில் மூன்று பவுண்டரிகளுடன் 21 ரன்கள் குவித்து பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது
“முதலில் நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்த விதத்தை பார்த்து நான்கு வருடங்களுக்குப் பிறகு நான் பேட்டிங் செய்யப்போவதில்லை என்று நினைத்து ஆசுவாசமாக ஒரு கப் டீ குடித்தேன். ஆனால் அதற்குள் ஆட்டத்தின் போக்கு மாறிவிட்டது. நிஜமாக சொல்ல வேண்டுமென்றால் நான் இதற்காக தயாராகவில்லை. கொஞ்சம் பதட்டமாகவே உணர்ந்தேன்.

- Advertisement -

நான் களமிறங்கும் போது இந்த சூழ்நிலை எனக்கு வித்தியாசமாக இருந்தது. உள்ளே சென்று அதை எப்படி கையாள வேண்டும் என்று சற்று யோசித்தேன். அதே சமயத்தில் நிறைய பந்துகள் மீதம் இருந்ததால் கொஞ்சம் பொறுமையாக ஆடி பெற்று பெற எளிதாக இருந்தது. ஆடுகளம் மூடி வைக்கப்பட்ட காரணத்தினால் முதலில் பந்துவீச்சுக்க சாதகமாக இருந்தது. நாங்கள் முதலில் பந்து வீசிய போது எங்கள் பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். மற்றும் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் டு பிளஸ்சிஸ் ஆகியோரும் அற்புதமாக விளையாடினார்கள். ஆனால் முதலில் பேட்டிங் செய்திருந்தால் சில ஷாட்களை விளையாடி இருக்க முடியாது.

இதையும் படிங்க:சின்னசாமி ஆடுகளம் வழக்கம் போல் இல்லை.. 4 விக்கெட்டுகளை இழந்ததும் பதட்டம் உண்டானது.. வெற்றிக்கு பின்னர் பேசிய டு பிளஸ்சிஸ்

நூர் அகமது பந்து வீசிக் கொண்டிருக்கும்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்வப்னில் சிங் ஸ்வீப் ஷாட் ஆடவா? என்று என்னிடம் கேட்டார். உங்களுக்கு அது சரியாக இருந்தால் அதையே முயற்சி செய்யுங்கள் என்று கூறினேன். அவரும் அற்புதமாக விளையாடினார்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles