சின்னசாமி ஆடுகளம் வழக்கம் போல் இல்லை.. 4 விக்கெட்டுகளை இழந்ததும் பதட்டம் உண்டானது.. வெற்றிக்கு பின்னர் பேசிய டு பிளஸ்சிஸ்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தங்கள் சொந்த மண்ணில் குஜராத் அணியை வீழ்த்தி இருக்கிறது. வெற்றி பெற்றது குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் டூப்ளசிஸ் முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. குஜராத் அணிக்கு இந்த தொடர் முழுவதுமே பேட்டிங் பிரச்சனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி பேட்டிங் தொடங்கிய குஜராத் அணி சகா ஒரு ரன்னிலும், கேப்டன் கில் இரண்டு ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

- Advertisement -

அதற்குப் பின்னர் களம் இறங்கிய மில்லர் 20 பந்துகளில் 30 ரன்கள், ஷாருக்கான் 24 பந்துகளில் 37 ரன்களும், ராகுல் டிவாட்டியா 21 பந்துகளில் 35 ரன்கள் குவிக்க 19.3 ஓவர்களில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே குவித்தது. பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் தயால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் இறங்கி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கோலி மற்றும் பாப் டு பிளஸ்சிஸ் ஆகியோர் ஜோடி அற்புதமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 92ரன்கள் குவித்தது. டூ ப்ளஸ்சிஸ் 23 பந்துகளில் 64 ரன்களும், விராட் கோலி 27 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்து வெளியேற அடுத்த 117 ரன்களுக்குள் மேலும் நான்கு விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்கியது.

அதற்குப் பிறகு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 12 பந்துகளில் 21 ரன்கள் குவித்து பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றிக்குப் பின்னர் பெங்களூர் அணியின் கேப்டன் டூ பிளஸ்சிஸ் கூறும்பொழுது
“நாங்கள் கடந்த இரண்டு போட்டிகளாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஆடுகளத்தில் நம்ப முடியாத அளவுக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

- Advertisement -

ஆடுகளத்தில் வித்தியாசமாக கொஞ்சம் பவுன்ஸ் இருந்தது. இந்த விஷயத்தை உடனே புரிந்து கொண்டு பந்துவீச்சாளர்களுக்கு சொல்லும் தேவை இருந்தது. இந்த போட்டியில் முக்கியமாக ஒரு கேட்சை கோட்டை விட்டோம். இருப்பினும் களத்தில் எங்களது முழுமையான பங்களிப்பு வெற்றி நம்பிக்கையை பெற்றுக் கொடுத்தது. இங்கு விளையாடிய எல்லா போட்டிகளுமே ஹை ஸ்கோரிங் கேமமாக இருந்திருக்கிறது.

இதையும் படிங்க:கோலியை விமர்சிக்க எந்த காரணம் இல்லை என்று இதை பேசுகிறார்கள்.. விராட் கோலி விளையாடினால் மட்டுமே ஆர்சிபி ஜெயிக்காது.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் அக்ரம்

இந்தப் போட்டியில் 170 முதல் 180 ரன்கள் வரை குவித்து இருந்தால் சவாலாக இருந்திருக்கும். நாங்கள் பேட்டிங் செய்ய வரும்போது ஸ்கோர் கார்டை பார்க்காமல் எங்களது ஆட்ட பாணியிலேயே அதிரடியாக விளையாட விரும்புகிறோம். விராட் கோலியும் நானும் ஆட்டமிழந்ததற்கு பிறகு மேலும் 4 விக்கெட்டுகளை இழந்ததால் கொஞ்சம் பதட்டம் உண்டானது. அப்போது மட்டும் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles