10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக நினைத்தேன்.. இவரின் 2 விக்கெட் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.. ஆட்டநாயகன் ஜடேஜா பேட்டி

இன்று நடைபெற்ற 53வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றது குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரகானே ஒன்பது ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும், கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடி 32 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் மொயின் அலி 17 ரன்களும் மிடில் ஆர்டரில் களம்பிறங்கி சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 26 பந்துகளில் மூன்று பவுன்டரிகள், இரண்டு சிக்சர்களுடன் 43 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை அணி 167 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் ராகுல் சகார் சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்குப் பிறகு இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியினர் தொடக்க ஆட்டக்காரர் பிரபு சிம்ரன் முப்பது ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு அதிகபட்சமாக சசாங்க் சிங் 27 ரன்கள் குவித்து வெளியேற, சிஎஸ்கேவின் சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் இறுதியாக ராகுல் சகார் 16 ரன்களும், ஹர்சல் பட்டேல் 12 ரன்கள் குவிக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே குவித்தது. பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

வெற்றிக்குப் பிறகு ஆட்டநாயகன் விருது பெற்ற ரவீந்திர ஜடேஜா கூறும்பொழுது
“இது பகலில் நடைபெற்ற ஆட்டம் என்பதால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. பவர் பிளேவரை நன்றாக சென்ற எங்களது பேட்டிங் அதற்குப் பிறகு சரியாக அமையவில்லை இதனால் ஒரு பார்ட்னர்ஷிப்பை நான் உருவாக்க முயற்சித்தேன். எங்களுடைய பந்துவீச்சாளர்கள் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசினர். துஷார் முக்கியமாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிங்க:பஞ்சாப்பை தவிடு பொடியாக்கிய சிஎஸ்கே.. புள்ளி பட்டியலில் கிடு கிடு உயர்வு.. 28 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே சிறப்பான வெற்றி

அதற்குப் பிறகு நானும் சான்ட்னரும் இணைந்து எங்கள் வேலையை சிறப்பாக செய்தோம். எப்போதும் பவர் பிளேவில் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் ஆடுகளம் பந்து பழையதாக மாறியதும் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறுகிறது. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என்று தான் நினைத்தேன். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இந்த வெற்றி எங்களுக்கு நன்றாக அமைந்திருக்கிறது. மேலும் பந்து வீச்சிலும் லூஸ் டெலிவரிகளை நாங்கள் வீசவில்லை. நாங்கள் எப்போதும் வெற்றி பெறும் பக்கத்தில் சிறப்பாக விளையாடியிருப்போம் என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles