புது பிரச்சனை.. வெறும் 25 நாள்.. ஐபிஎல் அணியின் சொந்த மைதானம் சீல் வைப்பு.. காரணம் என்ன.?

இந்தியாவில் நடைபெறும் 17வது ஐபிஎல் சீசன் தொடரானது வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ளும் இத்தொடரில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகள் என்றால் சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகளைக் குறிப்பிடலாம். இதில் சென்னை, மும்பை அணிகள் தலா ஐந்து முறை சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. ஐபிஎல் இன் தொடக்கத்தில் ஷான் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

- Advertisement -

அதன் பிறகு தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் தலைமையில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும், கோப்பையை கைப்பற்றும் அளவுக்கு பெரிதாக பங்களிப்பு அளிக்க முடியவில்லை. அதன் பிறகு சில வருடங்கள் கடந்து தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு குமார் சங்ககாரா பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

- Advertisement -

தற்போது சில வருடங்களாக சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை வந்து குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக விளங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் நோக்கில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே ஐபிஎல் தொடர் தொடங்கும் குறுகிய நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்த மைதானமான சவாய் மான் சிங் மைதானத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தின் விளையாட்டுச் செயலாளர் ராம் சவுத்ரி கூறுகையில்
“ராஜஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் எட்டு கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது. அந்தக் கடன் தொகையை தற்போது வரை திருப்பி செலுத்தவில்லை. எனவே இதுகுறித்து நாங்கள் நோட்டீஸ் அனுப்பிய போதிலும் சரியான பதிலும் கிடைக்கவில்லை. சவாய் மான் சிங் ஸ்டேடியம் மற்றும் அதன் அகாடமிகள் அனைத்தும் சீல் வைக்கப்படுகின்றன.

எனினும் இங்கு சர்வதேச போட்டிகளை நடத்தவோ அல்லது ஐபிஎல் போட்டிகளை நடத்தவோ எந்தத் தடையும் கிடையாது. இங்கு எல்லா போட்டிகளும் நடத்த அனுமதி உண்டு” என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது ஐபிஎல் தொடங்க குறுகிய நாட்களே இடைவெளி உள்ள நிலையில் இச்செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles