சாம்சனை இதுக்குத்தான் நான் இந்திய அணியில் தொடர்ச்சியா சேர்த்தேன்.. அவரை நம்புனதுக்கு நல்ல பலன் கொடுத்தார் – கம்பீர் புகழாரம்

இந்திய அணி t20 உலக கோப்பையை வெற்றி பெற்று சில வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கௌதம் கம்பீர் சஞ்சு சாம்சன் குறித்து புகழாரம் சூட்டி இருக்கிறார். கடந்த டி20 உலக கோப்பை தொடரில் சாம்சங் அணியில் இடம் பெற்றாலும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கௌதம் கம்பீர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

- Advertisement -

இருப்பினும் சில தொடர்களில் அவரது பேட்டிங் வரிசை மாற்றப்பட்டதால் அவர் பார்ம் இன்றி தவித்தார். இருப்பினும் அவரை நம்பிய கம்பீர் தொடர்ச்சியான போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கியதால் டி20 உலக கோப்பை தொடரின் கடைசி மூன்று ஆட்டங்களில் சாம்சன் பெரிய அளவில் ரன்கள் குவித்து உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் அவர் குறித்து கம்பீர் கூறும் போது “தொடக்க வீரர் சஞ்சு அதிரடியாக விளையாடக் கூடிய திறமை வாய்ந்தவர். அவர் சிறிது நேரம் நிலைத்து நின்றால் என்ன செய்ய முடியும் என்று நம் அனைவருக்கும் தெரியும். அவரது திறமை மீது எனக்கு எப்போதும் எந்தவிதமான சந்தேகமும் இருந்ததில்லை. அவர் களத்தில் ஆறு ஓவர் நிலைத்து நின்றால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை மிகவும் எளிதாக்கி கொடுத்து விடுவார். முதல் ஆறு ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதற்காகவே அணியில் சேர்க்கப்பட்டார்” என்று கம்பீர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles