ரோகித் சர்மா மாஸ்தான்.. ஆனா அதைவிட இந்த 2 விஷயம் தான் இந்தியா ஜெயிக்க முக்கிய காரணம்- விளக்குகிறார் சச்சின்

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு காரணம் ரோஹித் சர்மாவின் அற்புதமான இன்னிங்ஸ் மற்றும் அந்த இரண்டு முக்கிய தருணங்கள்தான் என்று சச்சின் டெண்டுல்கர் கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஆன்ட்டிகுவா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதில் ரோகித் சர்மா குவித்த 41 பந்துகளில் 92 ரன்கள் முக்கிய காரணமாக அமைந்தது. அதற்குப் பிறகு பேட்டிங் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் வெற்றி பெற்று விடும் என்ற நிலையில் தான் இருந்தது.

- Advertisement -

கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றியை பறித்த ட்ராவிஸ் ஹெட் இந்த முறையும் இந்திய அணிக்கு எதிராக அபாயகரமாக விளையாடிக் கொண்டிருந்தார். மறுமுனையில் கேப்டன் மார்ஸ் தனது பங்குக்கு அவரும் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் நிலைமையில் இருந்த ஆஸ்திரேலியா அணியை குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மார்ஷ் அடித்த சிக்ஸரை அபாரமாக கேட்ச் பிடித்து அக்சர் பட்டேல் அவரை வெளியேற்றினார்.

அதுமட்டுமில்லாமல் 76 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த ஹெட் பும்ராவின் பந்துவீச்சில் வெளியேறினார். இந்த இரண்டு விஷயங்கள்தான் இந்திய அணி திரும்பவும் ஆட்டத்திற்குள் வர மிக முக்கிய காரணங்களாக அமைந்தது. இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவாக கூறியிருந்தார். இது குறித்து சச்சின் கூறும் பொழுது “ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்த்தது உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. நல்ல இடத்தில் பேட்டிங் செய்த அவரால் தான் விரும்பிய இடத்தில் ஸ்விங் மற்றும் அற்புதமான டைமிங் பெற முடிந்தது.

- Advertisement -

இந்த வெற்றி அற்புதமானது வெல்டன் இந்திய அணி. மேலும் இந்த இரு விஷயங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. ஒன்று பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த அக்சார் பட்டேல் பிடித்த அபாரமான கேட்ச். மற்றும் ஹெட் பும்ராவின் பந்துவீச்சில் வெளியேறியது. இந்த இரண்டு விஷயங்கள்தான் இந்திய அணியின் வெற்றியை தீர்மானித்தது. இந்தியா தனது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெறுவதை பார்க்க தன்னால் காத்திருக்க முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:என்ன மனுஷன்யா.. இந்த காலத்துல இப்படி ஒரு வீரரா.. அர்ஸ்தீப் சிங்கை பாராட்டும் ரசிகர்கள்

இந்திய அணியை கடந்த டி20 உலக கோப்பை அரை இறுதிப் போட்டியில் இதே இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக் கோப்பையை விட்டே வெளியேறியது. எனவே அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே முயற்சிக்கும். இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles