டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மட்டுமல்லாமல் அர்ஸ்தீப் சிங்கின் மூன்று முக்கிய விக்கெட்டுகளும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
ஆனால் என்னுடைய வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் இல்லை என்றும், இந்த பந்துவீச்சாளர்தான் அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறார் என்றும் அர்ஸ்தீப் சிங் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி பேட்டிங் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் அசத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வேகம் பந்துவீச்சாளர்களா பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் ஆறு ரன்னில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை அர்ஸ்தீப் சிங் வீழ்த்தினார்.
மேலும் டிம் டேவிட் மற்றும் வேட் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியின் வீழ்ச்சிக்கு இவரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். இதனாலேயே இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி தற்போது அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இது மட்டும் இன்றி இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளிலும் இந்திய அணிக்கு இக்கட்டான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்த வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் இல்லை என்றும், பும்ரா ஏற்படுத்திக் கொடுக்கும் அழுத்தமே நான் விக்கெட்டுகளை வீழ்த்தவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “இதற்கான அதிகப்படியான பாராட்டுக்கள் பும்ரா பாய்க்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்தான் பேட்ஸ்மேன்கள் மீது அதிகப்படியான அழுத்தத்தை போடுகிறார். அவர் தனது ஓவரில் மூன்று அல்லது நான்கு ரன்கள் மட்டுமே கொடுக்கிறார்.
இதனால் அழுத்தத்தில் செல்லும் பேட்ஸ்மேன்கள் அடுத்து வரும் பந்துவீச்சாளரை அடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். நான் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி என்னுடைய சிறந்த பந்தினை வீச முயற்சி செய்கிறேன். அதனால் தனக்கு விக்கெட்டுகள் விழுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஏனெனில் பும்ராவின் பந்து வீச்சில் ரன்கள் வருவதில்லை.
இதையும் படிங்க:எனக்கே இந்தியாதான் உலக கோப்பை ஜெயிக்கணும் தோணுது.. காரணம் இந்த ஒரு விஷயம்தான்- சோயப் அக்தர் பேட்டி
அதனால் எதிர் அணியின் ரன் ரேட் அதிகமாக உயர்கிறது. அதனால்தான் எதிர் அணியினர் எனக்கு எதிராக அதிக ரன்கள் அடிக்க வேண்டிய ரிஸ்க் எடுக்கின்றனர். இதனால்தான் எனக்கு அங்கே விக்கெட்டுகளும் கிடைக்கிறது. இதனால் என்னுடைய வெற்றி எனக்கு மட்டுமே சொந்தம் இல்லை அதில் பாதி ஜஸ்சி பாய்க்கும் செல்லக்கூடியதுதான்” என்று கூறி இருக்கிறார். இந்த காலத்தில் இப்படியும் ஒரு பெருந்தன்மை கொண்ட வீரர் இருக்கிறாரா என்று அர்ஸ்தீப் சிங்கின் இந்த பெருந்தன்மையை தற்போது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

