எனக்கே இந்தியாதான் உலக கோப்பை ஜெயிக்கணும் தோணுது.. காரணம் இந்த ஒரு விஷயம்தான்- சோயப் அக்தர் பேட்டி

நேற்று நடைபெற்ற டி20 கோப்பை தொடரில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

மன அழுத்தத்தில் இருந்த இந்திய அணி இப்போதுதான் கொஞ்சமாவது நிம்மதி அடைந்திருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்பர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை தவிர ஓரளவு சிறிய அணிகளிடமே வெற்றிகளை பெற்று வந்தது. நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சரி சமமான ஒரு போட்டியை எதிர்கொண்டது என்று தான் கூற வேண்டும். இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணியோடு இறுதி போட்டியில் ஏற்பட்ட தோல்வி ரோஹித் சர்மாவின் மனதில் பதிந்திருந்தது இந்த ஆட்டத்தில் அப்படியே பிரதிபலித்தது. எந்த பந்துவீச்சாளரையும் விட்டு வைக்காமல் சிறிதும் அச்சமின்றி அனைத்து பவுலர்களையும் அடித்து நொறுக்கினார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட் ஒரு முனையில் பயம் காட்ட, மறுமுனையில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது.

இருப்பினும் இறுதியில் ஹெட்டின் விக்கெட்டையும் பும்ரா வீழ்த்த 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையில் ஏற்பட்ட தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் தக்க பதிலடி கொடுத்தது. இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் சோயப் அக்தர் கூறும் பொழுது “வாழ்த்துக்கள் இந்தியா. நீங்கள் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி விட்டீர்கள். இதனால் இந்த டி20 உலகக் கோப்பை உங்களுக்கானது.

- Advertisement -

இந்த உலக கோப்பையை வெல்ல 100 சதவீத தகுதி உங்களிடம் இருக்கிறது. என்னை பொருத்தவரை இந்த முறை ஆசிய கண்டத்தில் ஒரு அணி கோப்பையை வெல்ல வேண்டும். அதனால் தற்போது என்னுடைய முழு ஆதரவும் உங்களுக்கு தான். இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் நோக்கம் சிறப்பாக இருக்கிறது. எனவே இனிவரும் போட்டிகளிலும் இதே போன்ற செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க:அவரை இப்படியாச்சும் பாவம் வழி அனுப்பி வைங்க.. போறப்ப சும்மா போக கூடாது- ஷேவாக் வேண்டுகோள்

இந்த வெற்றி தற்போது இந்தியாவுக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வி இந்திய அணி வீரர்களுக்கு பெரிய மன அழுத்தத்தை கொடுத்தது. ஆஸ்திரேலியா அணியிடம் ஏற்பட்ட அந்த மனச்சோர்வு தற்போது ஆவேசமாக மாறி இருக்கிறது. எனவே இனிவரும் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும்” என்று அந்தர் கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles