இந்திய கிரிக்கெட் அணி நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தற்போது 6 புள்ளிகள் உடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
வருகிற 27ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்து அணியை அரையிறுதியில் சந்திக்க உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி இவருக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது கருத்தை கூறியிருக்கிறார்.
ஆரம்பம் முதலே ஒரு தோல்வி கூட அடையாமல் இந்த தொடரில் வெற்றிகளை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வருகிற வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. மற்றொரு அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்திய அணி அரை இறுதியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அல்லது ஆப்கானிஸ்தான் அணியை நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். இந்த உலகக் கோப்பையோடு இந்திய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்று விடுவார்கள் என்று தெரிகிறது. இவர்கள் மட்டுமல்லாமல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விளங்கும் ராகுல் டிராவிட் இந்த டி20 உலக கோப்பையை அடுத்து எனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட்டுக்காக இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார். இது குறித்து சேவாக் விரிவாக கூறும்பொழுது “இந்த உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தை தவிர வேறு எந்த போட்டியும் பொழுதுபோக்காக நான் பார்த்ததில்லை.
அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் 6 ஓவர்கள் வரை மட்டுமே களத்தில் இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் ரோகித் இன்று விளையாடிய விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. அவரின் ஆட்டம் அவ்வளவு அபாரமாக இருந்தது. அவர் என்ன செய்தார் என்று உங்களுக்கே தெரியும். இதைவிட வேற என்ன அவரால் செய்ய முடியும். அவர் தற்போது மக்களின் இதயங்களை வென்றுள்ளார்.
இதையும் படிங்க:அரை இறுதிக்கு என்ன பிளான்.. இங்கிலாந்தை வீழ்த்த என்ன திட்டம்.. விளக்கம் கூறும் ரோஹித் சர்மா
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று சச்சின் டெண்டுல்கரை பிரியாவிடை அனுப்பினோம். இந்த முறையை டி20 உலக கோப்பையை பயிற்சியாளர் டிராவிட்டுக்காக வெல்ல வேண்டும். ஏனென்றால் அவர் இதுவரை உலக கோப்பை வென்ற அணிகளில் இருந்ததே கிடையாது. இந்த முறையாவது அவ்வாறு பயிற்சியாளர் பதவியை விட்டு விலகுவதற்கு முன்பாக உலக கோப்பையை வென்று அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

