அரை இறுதிக்கு என்ன பிளான்.. இங்கிலாந்தை வீழ்த்த என்ன திட்டம்.. விளக்கம் கூறும் ரோஹித் சர்மா

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த வெற்றிக்கான முக்கிய காரணங்கள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆன்ட்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. பேட்டிங் தொடங்கிய இந்திய அணி விராட் கோலி இந்த போட்டியில் ரன் ஏதுமின்றி வெளியேறினாலும், மற்ற தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதில் எட்டு சிக்சர்களும் அடங்கும். பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் தங்களது பங்குக்கு போதுமான ரன்களை சேகரிக்க இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதில் ஹர்திக் பாண்டியா இறுதிக் கட்டத்தில் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 27 ரன்கள் குவித்தார். இதில் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 224 ஸ்ட்ரைக் ரைட்டில் ஆஸ்திரேலியா அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் நொறுக்கியது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதனால் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசும் பொழுது “இந்த போட்டியின் வெற்றி எங்களுக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. ஆஸ்திரேலியா அணி என்ன செய்ய முடியும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் நாங்கள் இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்டோம். 200 ரன்கள் அடிப்பது பெரிய விஷயம் இல்லை.

- Advertisement -

ஆனால் இங்குள்ள ஆடுகளத்தின் சூழ்நிலையை பயன்படுத்தி அதற்கு தகுந்தவாறு நாம் விளையாட வேண்டும். மேலும் இங்கு காற்று முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நாம் அதற்கு தகுந்தவாறு சூழ்நிலையை மாற்ற வேண்டும். குல்தீப் எப்படி பந்து வீசுவார் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். நியூயார்க் ஆடுகளத்தில் அவருக்கான தேவை அதிகமாக இல்லை. ஆனால் தற்போது அவரின் தேவை இங்கு நிறைய உள்ளது. அதனால் நாங்கள் அவரை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இதையும் படிங்க:பயத்தை காட்டிய ஹெட்.. மீண்டும் காப்பாற்றிய பும்ரா.. சாதனை படைத்த ரோஹித் சர்மா.. ஆஸியை வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்கு தகுதி

நாங்கள் அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளோம். நாட் அவுட் போட்டிக்கு என நாங்கள் எந்தவித புதிய மாற்றத்தையும் செய்யப்போவதில்லை. இதுவரை நாங்கள் எப்படி விளையாடினோமோ அதேபோல இனி வரும் போட்டிகளில் விளையாட போகிறோம். எனவே எதிர் அணி பற்றியும், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதையும் நாங்கள் சிந்திக்க மாட்டோம். ஆனால் அரை இறுதி நிச்சயம் நல்ல போட்டியாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles