பயத்தை காட்டிய ஹெட்.. மீண்டும் காப்பாற்றிய பும்ரா.. சாதனை படைத்த ரோஹித் சர்மா.. ஆஸியை வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்கு தகுதி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து தற்போது அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் இழந்த இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 41 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் எட்டு சிக்ஸர்களுடன் 92 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அடுத்ததாக சூரியகுமார் யாதவ் 16 பந்துகளில் 31 ரன்கள், தூபே 22 பந்துகளில் 28 ரன் mகளும் ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 27 ரன்களும் குவித்தனர். இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதல் முறையாக 200 ரன்கள் கடந்த சாதனை படைத்தது. மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் 19000 ரன்கள் கடந்து புதிய சாதனையை படைத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக பண்ட் மற்றும் ரோகித் சர்மா கூட்டணி 38 பந்துகளில் 87 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மட்டுமே 70 ரன்கள் குவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் அடித்து நொறுக்கினார். சுழல், வேகம் என எந்த பந்துவிசையும் பாரபட்சம் இன்றி ஒரே பாணியில் பௌண்டரியும் சிக்ஸ்ருமாக விளாசி தள்ளினார்.

இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. வழக்கம்போல கடந்த 2023 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில் வெற்றியை இந்தியாவிடம் இருந்து பறித்த ஹெட் இந்தப் போட்டியிலும் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். மறுமுனையில் வார்னர் ஆறு பந்துகளில் ஆறு ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பிறகு வந்த மார்ஸ் மற்றும் ஹெட் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை சிதைத்தது.

- Advertisement -

இரண்டாவது விக்கட்டுக்கு இந்த ஜோடி 48 பந்துகளில் 81 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை ஒரு வழியாக சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பிரித்தார். 28 பந்துகளில் 37 ரன்கள் குவித்த மிச்சல் மார்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹெட் 43 பந்துகளில் ஒன்பது பவுன்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்த நிலையில் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க:ஆஸி வீரரே மிரண்டு போன ஹிட்மேனின் அந்த ஒரு சிக்ஸர்.. புதிய ரெக்கார்டு படைத்த இந்தியா.. ஆஸிக்கு 206 ரன்கள் இலக்கு

இதன் மூலம் இவர் அதிரடி ஆட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதற்கு பின்னர் களமிறங்கிய மற்ற பேட்ஸ்மேன்களும் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் ஆஸ்திரேலிய அணி இறுதியில் 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நாளை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான போட்டியில் வெற்றி பெறுகிற அணியை பொறுத்து ஆஸ்திரேலிய அணி அடுத்து சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles