டி20 உலக கோப்பை கொண்டாட்டம் எல்லாம் போதும்.. இனி என்னோட அடுத்த இலக்கு இதுதான்.. சீக்கிரமா வேலையை ஆரம்பிக்கணும் – கௌதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி t20 உலக கோப்பையை கைப்பற்றிய நிலையில் அதற்குப் பிறகு தற்போது கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த வெற்றிக்குப் பிறகு கௌதம் கம்பீர், இனி அடுத்ததாக தென்னாபிரிக்காவில் நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கவனம் செலுத்த விரும்புவதாக பேசி இருக்கிறார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் குறைந்த அளவிலான ஒரு நாள் போட்டிகள் மட்டுமே நடைபெற இருப்பதாகவும், அதற்கான திட்டமிடல்கள் குறித்து ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்த கொண்டாட்டங்களை இனி ஓரம் வைத்துவிட்டு அடுத்ததாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக்கோப்பை குறித்து திட்டமிடல்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு இடையில் 25 முதல் 30 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட இருக்கிறது. இந்த வடிவத்திற்கு நிறைய போட்டிகள் பெரிதாக நடத்தப்படுவதில்லை. எனவே இதற்கான தயாரிப்புகளை எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் நல்லது. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடம் எனவே இதற்கான காம்பினேஷனை விரைவாக வடிவமைக்க வேண்டும். ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் இதற்கான மேப் வடிவமைக்கப்படும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles