உலகக்கோப்பை எங்கள் உணர்வு.. கோப்பையில் கால் வைத்த மார்ஸ் எங்க.. நம்மை இந்திய கேப்டன் எங்க.. வைரலாகி வரும் புகைப்படம்

ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடந்த இறுதிப் போட்டியோடு முடிவடைந்து இருக்கிறது.

- Advertisement -

இறுதி போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று தற்போது சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், தென்னாப்பிரிக்க அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பையையும் இழந்தது.

- Advertisement -

ஏற்கனவே 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி என மூன்று ஐசிசி தொடர்களிலும் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான டி20 அணியே இந்த உலகக் கோப்பையில் பங்கேற்க இருந்த நிலைமையில் பாண்டியா காயம் காரணமாக கடந்த ஆண்டு வெளியேற, அதற்குப் பின்னர் ரோஹித் சர்மாவையே இந்திய கிரிக்கெட் வாரியம் திரும்பவும் கேப்டனாக அறிவித்தது.

கடந்த ஆண்டு விட்டதை பிடிக்கும் விதமாக, தற்போது உலகக் கோப்பையையும் வென்று சாதனை படைத்துள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் அந்த அணி வீரர் ஷான் மார்ஸ் உலகக் கோப்பையின் மீது கால் வைத்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு உலகக் கோப்பைக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? என இந்திய ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலகக் கோப்பை கொண்டாட்டங்களை முடித்து இரவில் உறங்கச் சென்று விட்டு காலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஹாப்பி மார்னிங்’ என்ற வாசகத்தை பதிவிட்டு அதில் தனது டேபிளின் அருகில் உலகக் கோப்பையோடு தான் வாங்கிய மெடலையும் போட்டோ எடுத்து அதை பதிவிட்டிருக்கிறார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:என்ன நடந்தாலும் வாய் திறக்க கூடாது என உறுதியாக இருந்தேன்.. காரணம் இதுதான்- ஹர்திக் பாண்டியா பேட்டி

ஆஸ்திரேலியா வீரர் அவ்வாறு செய்த நிலையில் இந்திய கேப்டன் உலகக் கோப்பைக்கு எவ்வளவு மதிப்பு கொடுத்து இருக்கிறார் என்றும், உலகக்கோப்பை என்பது வெறும் கோப்பை அல்ல அது ஒரு உணர்வு என்றும் இந்திய ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த டி20 உலக கோப்பையோடு ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ஓய்வினை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles