இந்திய அணி மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களும் தற்போது வெற்றியில் திக்குமுக்காடி வருகிறார்கள். காரணம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் ஐசிசி கோப்பையை வென்றிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் ஹர்திக் பாண்டியா இந்த டி20 உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். டி20 உலக கோப்பை காண இந்திய அணி அறிவித்த பிறகு ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்க் குரல்கள் வந்தன.
காரணம் ஐபிஎல் தொடரில் மிக மோசமான பங்களிப்பை வெளிப்படுத்திய பாண்டியா, அந்தத் தொடரில் மும்பை அணியை பத்தாவது இடத்திற்கு தள்ளினார். இவரது சொதப்பலான கேப்டன்சி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எதுவும் குறிப்பிடத்தக்க வகையில் சரியாக அவருக்கு அமையவில்லை. மேலும் தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாகவும் பாண்டியா மிகவும் பின்தங்கி இருந்தார். இந்த சூழ்நிலையில் உலகக்கோப்பை அணியில் அவரால் விளையாட முடியுமா? அணிக்காக 100% பங்களிப்பை வெளிப்படுத்துவாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், முதல் பயிற்சி போட்டியிலேயே எனது ஏற்ற இறக்கங்கள் எல்லாம் என்னோடு முடிந்து விடும் இந்திய அணி என்று வந்துவிட்டால் நான் வேறு மாதிரி என்பது போல அதிரடியான பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டியில் இவர் எடுத்த இரண்டு விக்கெட்டுகளே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது இது குறித்து பாண்டியா விரிவாக கூறும்பொழுது ” இந்த தருணம் எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது. நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். ஆனால் இதற்கு முன்வரை எதுவும் சரியாக கிளிக் ஆகவில்லை. இன்று நம் நாடு விரும்பியது போல சாதித்திரிக்கிறோம். இதனால் கடந்த ஆறு மாதங்களாகவே நான் இது குறித்தும் வாய் திறந்து பேசவில்லை.
இது அனைத்திற்கும் தனது கடின உழைப்பால்தான் பதில் கொடுக்க முடியும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது நிஜமாகவே மகிழ்ச்சி. நாங்கள் எப்போதுமே நம்பிக்கையோடு இருந்தோம். எங்கள் வேலையை சரியாக செய்து எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதே எங்கள் திட்டமாக இருந்தது. அதை சிறப்பாக செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடைசி ஐந்து ஓவர்களை வீசிய முதல் வீரரில் இருந்து பும்ரா வரைக்கும் எனது பாராட்டுகளை கூறிக் கொள்கிறேன்.
இதையும் படிங்க:போட்டி எங்கள் பக்கம் வந்தது இந்த இடத்தில்தான்.. அப்போ பந்து எனக்கு இப்படித்தான் இருந்துச்சு- பும்ரா பேட்டி
நான் அமைதியாக இருந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நான் வீசிய ஒவ்வொரு பந்திலும் என்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை இந்திய அணிக்காக கொடுத்தேன். நான் அழுத்தத்தை கடந்து வந்திருக்கிறேன். டிராவிட் மிகவும் இனிய மனிதர். அவர் பயிற்சியாளராக இல்லாமல் ஒரு நண்பராக எங்களுடன் பழகிவிட்டார் அவருக்கு பிரியா விடை கொடுப்பதில் மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்

