கொஞ்சம் விட்டா போதுமே.. நாங்க வில்லன் அப்படிங்கிரதையே மறந்திடுவீங்களே.. திரும்பவும் கர்ஜித்த இந்திய அணி.. டி20 கிரிக்கெட்டில் மெகா சாதனை

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் டி20 வரலாற்றில் புதிய மெகா சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறது. எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி இந்திய அணி முதலில் களம் இறங்கியது. இதில் சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ரன் அடுத்து வெளியேறினார்

- Advertisement -

மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக்சர் 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் இஸான் கிஷன் 24 பந்துகளில் 38 ரன்கள், கேப்டன் சூர்யா 13 பந்தங்களில் 33 ரன் குவிக்க இறுதிக்கட்டத்தில் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 4 சிக்ஸர்கள் அடங்கும். மேலும் திலக் வர்மா 16 பந்தங்களில் 44 ரன்கள் குவிக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பு 256 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதன் மூலமாக இந்திய அணி t20 உலக கோப்பை வரலாற்றில் 256 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்தது. மேலும் கடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக ஆட்டம் இழந்த நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. ஆனால் அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்து சொந்த மண்ணில் திரும்பவும் நாங்க தான் ராஜா என்று இந்திய அணி திரும்பவும் நிரூபித்திருக்கிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles