ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு நல்லதல்ல.. பலே திட்டத்துடன் இறங்கிய தென் ஆப்பிரிக்கா.. படுதோல்வி அடைந்த இந்தியா.. டி20 WC SUPER 8

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

- Advertisement -

இஷான் கிஷன் முதல் ஓவர்லேயே தூக்கி அடித்து டக் அவுட் ஆகி வெளியேற, அதற்குப் பின்னர் வந்த திலக் வர்மா,1 ரன்னில் ஜான்சனின் பந்துவீச்சில் நடையை கட்டினார். அதற்குப் பின்னர் சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க, அதற்குப் பின்னால் வந்த வீரர்கள் யாரும் பொறுப்பை உணர்ந்த சிறப்பாக விளையாடவில்லை. இதில் அதிகபட்சமாக சிவம் தூபே 37 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

- Advertisement -

இதனால் இந்திய அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்து 76 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தென்னாபிரிக்க அணி ஆரம்பம் முதலே இந்திய வீரர்களுக்கு எதிராக அருமையான திட்டங்களோடு களம் இறங்கி இறுதியாக அதில் வெற்றியும் கண்டது. அனைத்து போட்டிகளிலும் ஜெயித்து வந்த இந்திய அணி ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆட்டத்தால் சூழ்நிலையை உணராமல் விளையாட தற்போது படுதோல்வி அடைந்துள்ளது. இனி அடுத்ததாக வருகிற 26 ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெறவேண்டிய நிலையில் உள்ளது

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles