IND vs SL.. செமி பைனலுக்கு ரெடி.. 19.4 ஓவர்.. 302 ரன்கள் வித்தியாசம்.. முகமது சமி சாதனையுடன் இந்தியா சாதனை வெற்றி.. இலங்கை பரிதாபத் தோல்வி.!

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் முப்பத்தி மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே மைதானத்தில் சந்தித்தன.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நான்கு ரன்னில் ஆட்டத்தின் இரண்டாவது பந்திலே கிளீன் போல்ட் ஆனார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி களத்திற்கு வந்து கில்லுடன் இணைந்தார். ஆரம்பத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சு அபாயகரமாக இருந்தது. எனினும் விராட் கோலி மற்றும் கில் இருவரும் தற்காப்புடன் ஆடினர்.

- Advertisement -

பின்னர் முதல் ஆறு ஓவர்களுக்கு பிறகு தங்களது ரன் வேகத்தை அதிகரித்தது இந்த ஜோடி. வழக்கமான ரன் சேகரிப்பில் ஈடுபட்ட இவர்கள் இருவரும் அரை சதம் எடுத்ததோடு இரண்டாவது விக்கெட்க்கு கூட்டாக 187 ரன்கள் சேர்த்தனர். உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில் 92 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸருடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். மேலும் 49ஆவது சதம் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சொந்த ஊரான மும்பையில் அவரது சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 94 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து கே.எல். ராகுல் 21 ரன்னிலும் சூரியகுமார் யாதவ் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் உலக கோப்பையில் தனது இரண்டாவது அரை சதத்தை நிறைவு செய்தார். அவருடன் ரவீந்திர ஜடேஜாவும் அதிரடியாக ஆடினார். இதனால் இந்தியா 300 ரன்கள் எளிதாக கடந்தது. 56 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர் உடன் 82 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தின் 47வது ஓவரில் அவுட் ஆனார் . இதனைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ஆடி இந்தியா 350 ரன்கள் கடக்க உதவினார். அவர் 24 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இந்தியா 50 ஓவர்களில் 357 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகள் இழந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் புயல் வேக பந்துவீச்சை சந்திக்க முடியாமல் சீட்டு கட்டுகள் போல சிதறியது. அந்த அணியின் துவக்க வீரர் பதும் நிசாங்கா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டத்தின் முதல் பந்திலையே பும்ரா வேகத்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஓவரில் முகமது சிராஜ் இலங்கை அணியின் கருணரத்னே மற்றும் சமர விக்ரமா ஆகியோரின் வீக்கத்தை வீழ்த்தினார். தியானியின் இந்த அசுரதாக்குதலில் இருந்து இலங்கை அணியால் மீள முடியவில்லை. ஆட்டத்தின் நான்காவது ஓவரில் முகமது சிராஜ் குசால் மெண்டிஸ் விக்கெட் வீழ்த்த 3 ரண்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து நிலை குலைந்து போனது இலங்கை அணி.

- Advertisement -

இந்தத் தொடரில் அனல் வேக ஃபார்மில் இருக்கும் முகமது சமி பத்தாவது ஓவரில் சரித் அசலங்கா மற்றும் துஷான் ஹேமந்தா ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்த 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்ற பரிதாப நிலைக்கு சென்றது இலங்கை. ஒரு கட்டத்தில் 50 ரன்கள் தாண்டுமா என்ற நிலையில் இருந்தபோது தீக்க்ஷனா மற்றும் ரஜிதா ஆகியோர் ஒரு சில பவுண்டரிகளை எடுத்து இலங்கை அணி 50 ரன்கள் கடக்க உதவியினர். எனினும் இலங்கை 19.4 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பும்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனால் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் படைத்தது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியா 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகப் 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உலகக் கோப்பையில் சாதனையாக இருந்தது . அதனை தற்போது இந்திய அணி முறியடித்து 302 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு புலிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இந்தப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிற்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் முகமது சமி. 45 விக்கெட்களுடன் இவர் முதலிடத்தில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து ஜவஹர் ஸ்ரீநாத் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் 44 விக்கெட்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர். மேலும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் முகமது சமி மேலும் இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles