நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வெற்றி இலக்காக குவித்த 213 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த ஐபிஎல்லில் பொதுவாக பெரும்பாலும் இரண்டாவது பேட் செய்யும் அணியே வெற்றி பெற்ற நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் முதலாவதாக பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. பிசிசிஐன் சொல்லுக்கு செவி சாய்க்காத சிஎஸ்கேவையும், தோனியையும் தற்போது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
முன்பெல்லாம் ஐபிஎல்லில் 200 ரன்கள் குவித்தாலே அது எதிரணிக்கு மிகவும் சிரமமாக தெரியும். இந்த 200 ரன்களை சேஸ் செய்வது என்பது பெரும்பாலும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே நடைபெறும். ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல்லில் பௌண்டரிகளும் சிக்சர்களும் வந்தால்தான் ரசிகர்கள் ஆர்வமாக போட்டியை பார்ப்பார்கள் என்று தவறாக கருதிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இந்தியாவில் உள்ள ஆடுகளங்களை பேட்டிங்க்கு சாதகமாகவும் அதில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெறும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
வாய்மொழி வார்த்தையாக பிசிசிஐ தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட மைதான அதிகாரிகள் அவ்வாறே பேட்டிங் சாதகமாக செயல்படும் வகையில் ஆடுகளத்தை மாற்ற, 250 ரன்கள் இதுவரை நான்கு முறை குவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மற்றும் லக்னோ ஆடுகளங்களில் பொதுவாகவே பந்து சற்று நின்று வரும். இந்த மைதானங்களில் 200 ரன்கள் குவித்தால் அதை சேஸ் செய்யும் எதிரணிக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.
இந்நிலையில் பிசிசிஐன் கட்டளையை ஏற்று அனைத்து ஆடுகளங்களும் பேட்டிங்கு சாதகமாக மாற்றப்பட, இதனை விரும்பாத மகேந்திர சிங் டோனி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளை அழைத்து, ஆடுகளத்தை பழைய மாதிரி மாற்றி அமையுங்கள் என்று கூறி இருக்கிறார். இதனாலேயே ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆடுகளத்தின் தன்மை மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த அணி நன்றாக ரன்கள் குவித்தாலும் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு, ஆடுகளம் தொய்வாக பந்து பேட்டுக்கு நின்று வரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. இதனாலேயே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியிடம் தோல்வியை தழுவியது.
பிசிசிஐயின் பேச்சைக் கேட்காமல் ஆடுகளத்தின் மீது கை வைத்த சிஎஸ்கே அணி மற்ற அணிகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் தோனியையும், சிஎஸ்கேவையும் தற்போது பாராட்டி வருகின்றனர்.

