இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி நடைபெற்ற நிலையில் மைதானத்தில் ஒருவர் தனது காதலியை பிரேக் அப் செய்ததாக அறிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் அபாரமாக விளையாடி 98 ரன்கள் குவித்தார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. மேலும் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களின் பெயர்களை அட்டையில் எழுதி போட்டி நடைபெறும் போது அதை மைதானத்தில் காண்பிப்பது வழக்கம். இது தோனி, கோலி, பும்ரா, ரோஹித் சர்மா போன்ற சூப்பர் ஸ்டார் வீரர்களுக்கு வழக்கமாக நடைபெறும். அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு அல்லது தகவலை எழுதி காண்பிப்பதன் மூலம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
இதே போல நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி அணிந்த ரசிகர் ஒருவர் தனது காதலியுடன் ஆன உறவை முறித்துக் கொண்டேன். ஏனெனில் அவரது பெயர் 7 எழுத்துக்களில் இல்லை என்று எழுதப்பட்ட மஞ்சள் நிற அட்டையை காண்பித்தார். இது போன்ற வினோதமான ரசிகர்களும் அவ்வப்போது கவனத்தை பெறுவார்கள்.
தோனியின் எண்ணான ஏழாம் நம்பரை அந்த ரசிகர் தனது ஜெர்சியில் அணிந்து இருந்தார். மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவரது எண் ஆன 7ம் நம்பரை ரிட்டயர்டு என அறிவிக்க பிசிசிஐ முடிவு செய்தது. ஒரு கிரிக்கெட் வீரர் அறிமுகமாகவதற்கு முன்பாக தனக்கு பிடித்த எண் ஜெர்சி நம்பராக தேர்வு செய்து கொள்ளலாம். இதே போல மகேந்திர சிங் தோனியும் சர்வதேச கிரிக்கெட் முதல் ஐபிஎல் தொடர் வரை ஏழாம் நம்பரை பயன்படுத்தி வந்தார்.
இவர் ஓய்வு பெற்ற பிறகு அந்த எண் வேறு யாருக்கும் வழங்கப்பட மாட்டாது.இந்த நிலையில் அந்த ரசிகர் தனது காதலியின் பெயர் ஏழு எழுத்துக்களில் இல்லை என்ற காரணத்தினால் தனது காதலை முடித்துக் கொண்டதாக அறிவித்த வினோத சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Fans at the Chepauk. 😄👌 pic.twitter.com/Qmk3pq4b0V
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 28, 2024

