ஆறுச்சாமி எங்கள் அணியின் சொத்து.. எதிரணி என்ன திட்டம் வைத்திருந்தாலும் அதை சிவம் தூபே முறியடிப்பார்.. புகழாரம் சூட்டிய சிஎஸ்கே பயிற்சியாளர் மைக்கேல் ஹசி

ஐபிஎல் தொடரின் 46-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில்அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இக்கட்டான சூழ்நிலையில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது நான்கு சிக்ஸர்கள் விலாசிய ஆல்ரவுண்டர் சிவம் துபேவை அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி சிவம் துபேவுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.

- Advertisement -

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ரகானே விரைவிலேயே ஆட்டமிழக்க அதற்கு பின்னர் அணியின் கேப்டன் ருத்ராஜ் மற்றும் டாரி மிச்சல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். டாரி மிச்சல் செட்டில் ஆகா சில நேரம் எடுத்துக் கொள்ள மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ருத்ராஜ் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 98 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

மறுமுனையில் பொறுமையாக விளையாடிய மிச்சல் 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய சிவம்தூபே வலுவான சன்ரைசர்ஸ் பந்து வீச்சுக்கு எதிராக நான்கு சிக்ஸர்களை பறக்க விட்டார். வெறும் 20 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட சிவம் தூபே ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர்கள் என 20 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.

அதில் ஒன்று நடராஜன் பந்துவீச்சில் இறுதி ஓவரில் ஒரு அபாரமான சிக்ஸரை விளாசினார். பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 134 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி சிவம் துபே எங்கள் அணியின் சொத்து என்று குறிப்பிட்டிருக்கிறார் இது குறித்து அவர் கூறும் பொழுது
“எதிரணி சிவம் துபேவுக்காக என்ன திட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் முன்னரே அறிந்து அவரை அதற்கேற்றவாறு நாங்கள் தயார் செய்து வருகிறோம்.

- Advertisement -

முதலில் அவருக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளை கொண்டு வந்தார்கள். அதனை அவர் வெற்றிகரமாக கையாண்டு விட்டார். அதற்குப் பிறகு வைடாக, மெதுவாக வீசும் பந்துகளை கொண்டு வந்தார்கள். அதற்கும் அவரிடம் திட்டங்கள் இருக்கிறது. பயிற்சியிலேயே இதையெல்லாம் சரியாக கணித்து அதற்கு தகுந்தவாறு பயிற்சியை மேற்கொள்கிறார். அவரிடம் அபரிமிதமான பலம் இருக்கிறது. எளிதாக சிக்ஸர்களை அடிக்கிறார் டூபே எங்கள் அணியின் சொத்து.

இதையும் படிங்க:தோல்வி பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை.. எங்களுடைய திட்டம் ஒன்றுதான்.. தோல்விக்கு பின்னர் பேசிய சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ்

மேலும் இந்த போட்டியில் ருத்ராஜ் அபாரமாக விளையாடினார். திறமை மட்டும் இல்லாமல் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆடும் பக்குவம் அவரிடம் இருக்கிறது. எப்போது அடித்த ஆட வேண்டும் எப்போது பொறுமையாக ஆட வேண்டும் என்பதை அவர் நன்கு அறிவார். வேகப்பந்துவீச்சு, சுழற் பந்துவீச்சு என இரண்டையுமே சிறப்பாக கையாண்டு வருகிறார் என்று கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles