சதம் விளாசிய சிஎஸ்கே கேப்டன்.. நம்பர் 3ல் களமிறங்கி ருதுராஜ் கெய்க்வாட் செய்த சாசகம்.. மிரண்டுபோன 11 வீரர்கள்

தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் சுற்று போட்டியில் மகாராஷ்டிரா அணியை எதிர்த்து சட்டீஸ்கர் அணி களமிறங்கியது. அதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

- Advertisement -

சதம் விளாசிய சிஎஸ்கே கேப்டன்

இந்த நிலையில் ஹிமாச்சல் பிரதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரா களமிறங்கியது. நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், தொடக்கம் முதலே அதிரடியாக ரன்களை விளாசி வந்தார். 122 பந்துகளில் சதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து அதிரடியாக ரன்களை குவித்தார். 

- Advertisement -

144 பந்துகளில் 133 ரன்களை எட்டிய ருதுராஜ் கெய்க்வாட், பின்னர் ஆட்டமிழந்து வெளியேறினார். ஐபிஎல் தொடருக்கு பின் ருதுராஜ் கெய்க்வாட் முதல்முறையாக சதம் விளாசி அசத்தி இருக்கிறார். இந்தியா ஏ அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்ட போதும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

வாய்ப்பு கிடைக்காத ருதுராஜ்

அதன்பின் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட ருதுராஜ் கெய்க்வாட் முயற்சித்த போது, கடைசி நேரத்தில் சொந்த காரணங்களுக்காக விலக வேண்டிய நிலை வந்தது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பும் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் துலீப் டிராபி தொடருக்கு முன்பாகவே புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தனது ஃபார்மை நிரூபித்துக் காட்டி இருக்கிறார். 

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் என்பதில் தோனி தெளிவாக இருக்கிறார். கடந்த சீசனில் காயம் காரணமாக விலகியதால், சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கி ஃபார்முக்கு திரும்பி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles