ரோகித்தை கேப்டனாக இருக்கச் சொன்னது நான்தான்.. ஆனால் கோலியை ரிசைன் பண்ண சொல்லல.. கங்குலி குழப்பமான பேட்டி.!

2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். எனினும் அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியை தலைமை நடத்துவதாக விருப்பம் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் அப்போதைய தேர்வு குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவினர் விராட் கோலியை ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கினர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவுக்கு பின்னர் தனது டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார் விராட் கோலி. மேலும் விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அப்போதைய பிசிசிஐ சேர்மன் ஆக இருந்த சவுரவ் கங்குலி தான் காரணம் எனவும் விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி இருவரும் சில காலம் எதிரும் புதிருமாக இருந்தனர். கடந்த ஐபிஎல் தொடரில் கூட விராட் கோலி சௌரவ் கங்கூலியை முறைத்துப் பார்ப்பது போன்ற வீடியோ வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சனை தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மௌனம் கலைத்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ முன்னாள் தலைவர்மான சவுரவ் கங்குலி.

இது தொடர்பாக தாதாகிரி சீசன் 10 என்ற நிகழ்ச்சியில் பேசிய சவுரவ் கங்குலி” விராட் கோலி இடம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யுமாறு நான் வற்புறுத்தவில்லை. அவர் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதை விரும்பவில்லை. எனவே ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தால் வெள்ளைப் பந்து அணிக்கு ஒரே கேப்டனை நியமிப்பது அணிக்கும் நல்ல விஷயமாக அமையும் என்று தான் தெரிவித்தேன். இது தொடர்பாக நான் பலமுறை பேசி இருக்கிறேன். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருப்பதையே நானும் விரும்பினேன்” என தெரிவித்திருக்கிறார்

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ரோஹித் சர்மாவுக்கு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்த விருப்பம் இல்லை. நான்தான் கட்டாயப்படுத்தி கேப்டன் பொறுப்பேற்க அவரை வற்புறுத்தினேன். இந்திய அணி இந்த வருட உலக கோப்பையில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் வீரர்களின் திறமையால் வந்தது. இதில் என்னுடைய பங்களிப்பு சிறிதளவு இருந்தாலும் அனைத்து பாராட்டுக்களும் வீரர்களையே சேரும். இந்திய கிரிக்கெட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காகவே நான் பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த விதத்தில் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக அமைந்ததில் எனக்கும் சிறு பங்கு இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.

விராட் கோலி டெஸ்ட் போட்டியில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய விமர்சனத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது இது தொடர்பாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் மற்றும் பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles