எனக்கு நல்லா தெரியும்.. மோசமான கேப்டன்னு என்னை சொல்ல போறீங்க.. ரோகித் சர்மாவின் உணர்ச்சிபூர்வமான பேட்டி.!

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி ஆறு போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று பாயிண்ட்ஸ் டேபிள் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நேற்றைய போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்தே இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது . ஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றதோடு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரையும் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தற்போது உலக கோப்பை தொடரிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி உலகக் கோப்பையில் தங்களது ஏழாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து மும்பையில் இன்று விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுவிடும். இதனால் இந்திய ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இலங்கை அணி உடனான சமீபத்திய போட்டிகளிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து போட்டிக்கு முதல் நாள் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

- Advertisement -

அந்தப் பேட்டியின் போது ஒரு போட்டியில் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் மனநிலை எவ்வாறு மாறும் என உருக்கமாக தெரிவித்து இருக்கிறார். இந்தியா தொடர்ந்து வெற்றி பெறும் போது தன்னை கொண்டாடும் ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் மோசமான கேப்டன் இன்று சித்தரிப்பார்கள் என உணர்ச்சிபூர்வமாக கூறினார். மேலும் வெற்றியோ தோல்வியோ எது எப்படி இருப்பினும் தன்னுடைய மனநிலை மற்றும் அணிக்கான திட்டங்கள் எதுவும் மாறப் போவதில்லை எனவும் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து பேசியிருக்கும் ரோகித் சர்மா ” போட்டிக்கான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் என்னுடையது அல்ல. அது இந்திய அணியின் ஒட்டுமொத்த திட்டம் மற்றும் செயல்பாடுகள் . இதில் ஒவ்வொரு வீரரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது . எல்லா விஷயங்களும் நன்றாக நடந்து கொண்டிருக்கும்போது எல்லாமே நன்றாகத்தான் தோன்றும்” எனக் கூறினார்.

- Advertisement -

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசுகையில் ” எனக்குத் தெரியும் இதில் எங்கேயும் ஒரு சிறு தவறு நடந்தால் கூட நான் மோசமாள கேப்டனாக சித்தரிக்கப்படுவேன் என்பதும் எனக்குத் தெரியும். இது எல்லாம் எப்படி நடக்கிறது என தெரியும். அணியின் வெற்றிக்காக எதுவெல்லாம் செய்யப்பட வேண்டுமோ அதையெல்லாம் செய்து வருகிறேன். மேலும் திட்டங்கள் எல்லாம் சரியாக செயல்படுகிறதா என்பதையும் உறுதி செய்து செயல்படுத்தி வருகிறேன்” எனக் கூறினார்.

ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக முகமது சமீ மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரை பயன்படுத்தி வருவது குறித்து பதிலளித்த அவர் ” நாங்கள் ஆடுகளங்களில் தன்மைக்கு ஏற்றவாறு வீரர்களை தேர்வு செய்து செயல்படுத்தி வருகிறோம். அணிக்கு எது சிறப்பாக அமைகிறதோ அதையே செயல்படுத்த விரும்புகிறோம். மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் தேவைப்படும்போது அதனையும் செயல்படுத்துவோம். இந்த உலகக் கோப்பையில் 10 முதல் 40 ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு ரன்களை கட்டுப்படுத்துகிறார்கள். எனவே சுழற் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு இருக்கும்போது ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தாலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles